காரைக்கால் மாவட்டம் வரிச்சிக்குடியைச் சேர்ந்த ராஜா-ஸ்டெல்லா மேரி தம்பதியரின் மகள் சலேத் நிதிக்ஷனா(14 வயது). 7-ம் வகுப்பு வரை படித்த இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தசை சுருக்க நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வீட்டில் இருந்து வந்தார்.
இவரால் சரியாக நடக்க இயலாமல் சுவரைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடப்பார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் வாந்தி எடுத்துள்ளார். அது குறித்து அவரது தாய் சலேத் நிதிக்ஷனாவிடம் விசாரித்தபோது கேக் என நினைத்து வீட்டிலிருந்த எலி மருந்தை சாப்பிட்டது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக அவரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டுச்சேரி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தசை சுருக்க நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வீட்டில் இருந்து வந்த சிறுமி உயிர் இழந்த விவகாரம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சரக்கு தான் கடத்துவாங்க! இப்ப என்னன்னா பெட்ரோல் டீசலும் கடத்தறாங்களா!! இது என்னடா நூதன கொள்ளையா இருக்கு.
காரைக்காலில் தனியார் பெட்ரோல் பங்கில் இருந்து தமிழகத்திற்கு 12,000 லிட்டர் டீசல் கடத்த முயன்ற டேங்கர் லாரி ஓட்டுநர் மற்றும் பங்கு மேலாளர், ஊழியர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி மாநிலம் என்றாலே மது பிரியர்களுக்கு தனி ஆர்வம் தான் தமிழகத்தை விட புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்கள் குறைந்த விலையில் விற்கப்படுவதால் தமிழக எல்லையில் இருந்து மதுப்பிரியர்கள் புதுச்சேரியில் மாநில எல்லைக்குச் சென்று அங்கு மது அருந்துகின்றனர். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புதுச்சேரி மாநில மது வகைகளை தமிழக பகுதிகளுக்கு கடத்தி வரப்பட்டு கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறது. இதை தடுக்கும் விதமாக தமிழக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து கடத்தி வரப்படும் மதுபான வகைகள் கடலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் என பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தும் சிறையில் அடைத்து வருகின்றனர். குறைந்த விலைக்கு புதுச்சேரி மாநிலத்தில் மது வகைகளை வாங்கி தமிழக பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதிப்பதில் ஒரு சிலர் ஆர்வம் காட்டி வருவது அனைவரும் அறிந்த ஒன்று இந்த நிலையில் ஒரு படி மேலே சென்று புதுச்சேரி மாநிலத்தில் டீசல் 86 ரூபாய்க்கு விற்கப்படுவதால் அங்கிருந்து டேங்கர் லாரி மூலம் கடத்தி தமிழக பகுதிகளில் 94 ரூபாய்க்கு விற்று குறுகிய காலத்தில் அதிக பணம் மீட்ட முடிவு செய்து களத்தில் விளங்கிய நபருக்கு நேர்ந்த கதி தான் இது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த அம்பத்தூர் பகுதியில் நேற்று இரவு நேரத்தில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டீசல் ஏற்றிக்கொண்டு தமிழக பகுதிக்கு கொண்டு செல்வதற்காக வந்த டேங்கர் லாரியை போலீசார் மடக்கி விசாரணை செய்தனர். அப்போது போலீசார் விசாரணை செய்ததில் காரைக்கால் அடுத்த பச்சூரில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்கில் இருந்து தமிழக பகுதியான சேலத்திற்கு 12,000 லிட்டர் டீசல் கடத்தி சென்றது உறுதியானது. இதனை அடுத்து டேங்கர் லாரி ஓட்டுநர் மாரி செல்வன் மற்றும் பெட்ரோல் பங்க் மேலாளர் ராஜ்குமார் மற்றும் ஊழியர் மதிமாறன் ஆகியோரை உணவுப்பிரிவு காவல் நிலைய போலீசார் அவர்கள் கைது செய்து. தமிழகத்திற்கு டீசல் கடத்த முயன்றதற்கு பயன்படுத்திய டேங்கர் லாரி மற்றும் டீசலை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.