விழுப்புரம் : விழுப்புரம் அருகேயுள்ள அரியலூர் திருக்கையில் பெங்களூரில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்தில் சிக்கிய பேருந்து:
விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகே உள்ள அரியலூர் திருக்கை என்ற இடத்தில் பெங்களூரில் இருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரி சென்று சொகுசு ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. அரியலூர் திருக்கை என்ற இடத்தில் ஆம்னி பேருந்துவின் கியர் ராடு கட்டாகி ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த பேருந்து சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பேருந்து கவிழ்ந்த விபத்தில் பயணம் செய்த 27 பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்து நடைபெற்ற இடத்திலிருந்த பொதுமக்கள் பேருந்தில் இருந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கெடார் போலீசார் சம்பவ இடத்தில் விசாரனை மேற்கொண்டனர். இந்த விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படாமல் பயணிகள் தப்பித்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.