தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான அரசியல் கட்சி தலைவர் திருமாவளவன். விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவரான திருமாவளவன் தற்போது மக்களவை உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். திருமாவளவன் தற்போது மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.






மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திருமாவளவன் அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். சமீபகாலமாக தன்னை அசத்தலான உடைகளுடன் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.



மேலும் படிக்க : Viral Video : எச்.ராஜா இருக்கும்பொழுது, நிருபரை மதத்தை சொல்லி திட்டிய பா.ஜ.க. நிர்வாகி..!


மலேசியாவில் நடைபெற உள்ள தமிழர் ஒற்றுமை விழாவில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள திருமாவளவன் கருப்பு நிற கண்ணாடி, கலர் சட்டை, கருப்பு பேண்டுடன் அசத்தலான புகைப்படங்களை எடுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.






மேலும், அங்கு நடைபெற்ற தமிழர் ஒற்றுமை விழாவில் பங்கேற்றார். மேலும், அங்கு நடைபெற்ற மலேசிய பயணத்தில் ஏராளமான கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மலேசிய பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்புவதாகவும் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.


 தமிழர் ஒற்றுமை விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மலேசியாவில் பங்கேற்றேன். மலேசிய பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்புகிறேன். தற்போது கோலாலம்பூர் விமான நிலையத்தில் தோழர்கள் சந்தித்தனர் என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க : கட்சி அழிவு பாதைக்கு செல்கிறது என்றால் அதற்கு எட்டப்பன் கே. பி. முனுசாமிதான் காரணம் - கிருஷ்ணமூர்த்தி


மேலும் படிக்க : Amitshah meet Junior NTR: மல்லுக்கட்டும் மருமகன்.. பேரனுக்கு மடைமாறும் பாஜக! ஜூனியர் என்.டி.ஆரை குறிவைக்கும் அமித்ஷா?!