அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் ஸ்வாமிக்கு வெண்ணை காப்பு அலங்காரம் நடைபெற்றது. கரூர் அண்ணா சாலை பகுதியில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதைத்தொடர்ந்து பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, வெண்ணை காப்பு அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.




அதே போல் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதைத் தொடர்ந்து வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆலயத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி வெண்ணை காப்பு அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய நிர்வாகி சார்பாக சிறப்பாக செய்திருந்தார்.





கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் உறியடி திருவிழா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவீதி உலா.



கரூர் நகர பகுதியில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் ஆவணி மாத கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற உறியடி திருவிழாவை முன்னிட்டு பண்டரிநாதன் மற்றும் தாயாருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதைத் தொடர்ந்து பட்டாடை உடுத்தி, வண்ண மாலை அணிவித்த பிறகு ஆலயத்தில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.




அதை தொடர்ந்து ஆலய வாசலில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக உறியடி திருவிழாவில் கிருஷ்ணன் வேடத்தில் ஏராளமான இளைஞர்கள் உறியடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து ஸ்ரீ பண்டரிநாதன் சுவாமி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா சென்றார். மீண்டும் ஆலயம் வந்த சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு ,நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு , மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. ஆலயத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி காலபைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.


தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி பூஜை காலபைரவருக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு எண்ணெய்க்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம் ,தேன், நெய், இளநீர், எலுமிச்சைச் சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட சிறப்பு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.




அதைத்தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் காலபைரவருக்கு பட்டாடை உடுத்தி , வண்ண மாலைகள் அணிவித்து, வடமாலை சாத்தப்பட்டது. சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டி, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பல்வேறு சோடச உபசாரங்கள் நடைபெற்ற பிறகு , பஞ்ச கற்பூர ஆலாத்தி யுடன், மகாதீபாராதனை நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி பூஜையில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர் . நிகழ்ச்சியில் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.