தெலுங்கானாவில், பாஜகவின் உள்துறை அமைச்சரும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும்-ம் இன்று இரவு உணவு விருந்தில் சந்திக்கவுள்ளனர். இதையடுத்து, ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து பாஜக தெலுங்கானா மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானாவில் அமித் ஷா:
தெலுங்கானா மாநிலம் முனுகோட் சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து, பாஜக-வில் இணைந்தார். இதையடுத்து முனுகோட் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றார். மீண்டும் ராஜகோபாலே போட்டியிட உள்ளதாகவும், ஆனால் பாஜக சார்பில் களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜூனியர் என்.டி.ஆர்- அமித்ஷா சந்திப்பு:
தெலுங்கானா மாநிலத்தில் ராஷ்ட்ரிய கட்சியை சேர்ந்த முதலமைச்சர் சந்திரசேகர் ஆட்சி செய்து வருகிறார். இவர் சமீப காலமாக பாஜக-விற்கு நேரடியாகவே எதிர்ப்பு எதிர்த்து வருகிறார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது . அதையொட்டி தென் மாநிலமான தெலுங்கானாவில் வலுவாக காலூன்றும் வகையில், அரசியல் செல்வாக்கும், சினிமா ரசிகர் அதிகமுள்ள ஜூனியர் என்.டி.ஆர்-ஐ களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூனியர் என்.டி.ஆர், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்து, முதலமைச்சராக பதவி வகித்த என்.டி.ஆர்-ன் பேரன் ஆவார். அதனால் செல்வாக்கு மிகுந்த என்.டி.ஆர்-ன் பேரன் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து பாஜக திட்டமிடுவதாக அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மருமகன் வேண்டாம், பேரன் இருக்கும் போது
ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த என்.டி.ஆர்-ன் மருமகன் சந்திர பாபு செயல்பட்டு வருகிறார். சந்திர பாபு நாயுடுவும் கடுமையாக விமர்சனம் செய்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஒருவேளை என்.டி.ஆரின் மருமகனான சந்திர பாபு-வுக்கு பதிலாக பேரன் ஜூனியர் என்.டி.ஆரை களத்தில் இறக்கலாம் என்றும் அரசியல் விமர்சர்கள் விமர்சித்து வருகின்றனர்.
சினிமா பிரபலங்களை குறிவைக்கும் பாஜக:
தென்னிந்தியாவில் பாஜக வளர்க்கும் நோக்கில் செயல்பட்டு வரும் பாஜக, கர்நாடகாவில் மட்டும் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து, தமிழ்நாட்டு அரசியலில் பாஜக நுழையப்போவதாக பலரும் தெரிவித்து வந்தனர். ஆனால் ரஜினிகாந்தோ, நான் உறுதியாக அரசியலுக்கு வர மாட்டேன் என அறிவித்து விட்டார். அதனை தொடர்ந்து இளையராஜா நியமன எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து ஆந்திரா-தெலுங்கானாவில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக தென்னிந்திய அரசியலில் விவாதமாக மாறியுள்ளது.