பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் எச்.ராஜா. இந்த நிலையில், அவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்துவிட்டு எச்.ராஜா செல்கிறார். அப்போது, அவருடன் வந்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் நிருபர் ஒருவரை அவரது மதத்தை கூறி விமர்சிக்கிறார்.

Continues below advertisement




மேலும், நீ இந்த மாதம்தானே? என்று ஒரு மதத்தை குறிப்பிட்டு அதன் காரணமாகதான் இவ்வாறு கேள்வி கேட்கிறாய் என்று பேசுகிறார். அவரை அமைதியாக வருமாறு முன்னே சென்ற எச்.ராஜா கை காட்டுகிறார். ஆனாலும், அந்த நிர்வாகி நிருபரை மீண்டும் மீண்டும் நீ இந்த மதம்தானே? என்று குறிப்பிட்ட மதத்தின் பெயரை கூறி வசைபாடுகிறார். மேலும், அநாகரீகமான வார்த்தைகளாலும் அவர் நிருபரை தரக்குறைவாக பேசுகிறார்.






நிருபரை மதத்தை குறிப்பிட்டு தரக்குறைவாக பேசிய பா.ஜ.க. நிர்வாகியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பா.ஜ.க.வின் முன்னணி தலைவர் எச்.ராஜா பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவரது முன்னாலே பா.ஜ.க. நிர்வாகி நிருபரை மதத்தை குறிப்பிட்டு அநாகரீகமாக பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க : ‘ஓபிஎஸ் புலியாக மாற வேண்டும்; சசிகலாவுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ்’ - சையதுகான் காட்டம்


மேலும், அந்த பா.ஜ.க. நிர்வாகி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், பா.ஜ.க. நிர்வாகியின் செயலுக்கு பத்திரிகையாளர்கள் சங்கத்தினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வைச் சேர்ந்த எச்.ராஜா உள்ளிட்ட பலரும் சர்ச்சைக்குரிய வகையில் அடிக்கடி கருத்துக்களை தெரிவித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : 'நான் அரசியலுக்கு வருவதற்கு காரணம் திமுக தான்" - பாஜக தலைவர் அண்ணாமலை


மேலும் படிக்க : Jayalalitha: ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை: அப்போலோவுக்காக பரபரப்பு அறிக்கை வெளியிட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு