TN Ministers LIVE: தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்.. யார் யாருக்கு எந்த துறை?

Udhayanidhi Stalin Swearing In as TN Minister LIVE Updates: இன்று காலை 9:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

முகேஷ் Last Updated: 14 Dec 2022 11:41 AM
வாழ்த்துகள் தம்பி, அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள்.. அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!

வாழ்த்துகள் தம்பி, அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள்.. அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!





நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு!

அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் துறையும் புதிதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மெய்யநாதனுக்கு கூடுதலாக முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை..!

அமைச்சர் மெய்யநாதனுக்கு சுற்றுச்சூழல் துறையுடன் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு..!

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்குக் கூடுதலாக சீர் மரபினர், காதி, கிராம தொழில் வாரியத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

சேகர் பாபுவுக்கு கூடுதல் துறை..!

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் பதவியை தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்..!

தலைமை செயலகத்தில் தனது அறையில் அமைச்சர் பணியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார். 

அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு..!

அமைச்சர் உதயநிதிக்கு சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை, வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன் திட்டம் ஆகிய துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்..!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. 


கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த பெரியசாமி ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றியங்கள் துறை அமைச்சராக நியமனம். 


வீட்டு வசதித்துறை அமைச்சராக இருக்கும் முத்துசாமிக்கு நகர்ப்புற திட்டமிடல் துறை கூடுதலாக ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்

தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்: அமைச்சர் மதிவேந்தனிடம் இருந்த சுற்றுலாத்துறை மதிவேந்தனுக்கு ஒப்படைப்பு

தமிழ்நாடு அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு..!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதன் மூலம் தமிழ்நாடு அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. 



விளையாட்டுத் துறை அமைச்சரானார் உதயநிதி..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு வாழ்த்து...!

அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர்



அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் என்று ட்வீட் செய்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார்

பதவியாக கருதாமல் பணியாற்றுவேன் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்புக்கு பிறகு மேடையில் உருக்கமாக பேசினார். 

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின்...!

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!

சென்னை - கிண்டி ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

Udhayanidhi Stalin LIVE: அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்..!

தமிழ்நாட்டின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். 

இன்னும் சற்று நேரத்தில் பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.. நேரலை இதோ..

Breaking Live : ஆளுநர் மாளிகை வந்தடைந்தார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சற்று நேரத்தில் அமைச்சராக பதவியேற்க உள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதற்காக தற்போது ஆளுநர் மாளிகைக்கு உதயநிதி ஸ்டாலின் வந்தடைந்தார்.

Udhayanidhi Stalin LIVE: உதயநிதி ஸ்டாலினின் அரசியல் உதயமும்... கடந்து வந்த பாதையும்...!

உதயநிதி ஸ்டாலினின் அரசியல் உதயமும்... கடந்து வந்த பாதையும்...!


அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின்! சிறப்பு நேரலை!


 

உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப்பிரமாணமும்..!

தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப்பிரமாணமும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைக்கிறார். 

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு - விழாவுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அழைப்பு

இன்று அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்; விழாவுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அழைப்பு

Background

Udhayanidhi Stalin Swearing In as TN Minister LIVE Updates: திமுக இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில்,  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதைதொடர்ந்து, கட்சிப்பணி மற்றும் திரைத்துறையில் ஒரே நேரத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, மூத்த அமைச்சர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவை மாற்றம் நிகழலாம் என கருதப்பட்டது.


அமைச்சராகிறார் உதயநிதி:


இந்நிலையில் தான் உதயநிதியை அமைச்சராக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் பரிந்துரைத்திருந்தார். அதையேற்று, இன்று காலை 9:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே,  உதயநிதிக்கான அறை தலைமைச் செயலகத்தில் தயாராகி வருகிறது. சட்டப்பேரவைக் கட்டிடத்தின் 2-ம் தளத்தில் உள்ள அறையில் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் செயலராக இருந்த அபூர்வா மாற்றப்பட்டு, டெல்லியில் தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அதுல்ய மிஸ்ரா அப்பதவியில் நியமிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.


அமைச்சரவையில் மாற்றம்:


தற்போதைய சூழலில் அமைச்சர் மெய்யநாதன் சுற்றுசூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை பொறுப்புகளை வகித்து வருகிறார். அதிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை உதயநிதிக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் முறையாக செயல்படாதவர்கள் மற்றும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிய அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்தின் போது ஐ.பெரியசாமி மற்றும் உதயநிதிக்காக திமுக இளைஞரணி செயலாளர் பதவியை விட்டுக்கொடுத்த வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்டோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.


தாத்தா, அப்பாவை மிஞ்சிய உதயநிதி:


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எம்.எல்.ஏ. ஆன 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றார். அதைதொடர்ந்து, தற்போதைய முதலமைச்சரான ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆன 17 அண்டுகள் கழித்து தான் அமைச்சரானார். ஆனால், சட்டமன்ற உறுப்பினரான 19 மாதங்களிலேயே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார் என்பது குறிப்பிடத்தகது.


உதயநிதியின் பரப்புரையும், அமைச்சர் பொறுப்பும்:


கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, ஒரே ஒரு செங்கலை வைத்து கொண்டு அவர் செய்த பரப்புரை மாநிலம் முழுவதும் பேசுபொருளானது. குறிப்பாக, மக்கள் மத்தியில் அவரது பரப்புரை தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். இதையடுத்து, உதயநிதி தலைமையில் நடத்தப்பட்ட இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டமும் அவரின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.


சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே, உதயநிதி தன்னுடைய தொகுதியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோக்கள் கூட அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின. இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


அதேபோல முக்கிய அமைச்சர்களான செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்தனர். அதேபோல அமைச்சர் மூர்த்தி, சிவசங்கர் உள்ளிட்டோரும் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். எனினும் இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. 


அதே நேரத்தில் அரசு விழாக்களிலும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சட்டப்பேரவையில் முதலமைச்சருக்கு பின்னால் இரண்டு வரிசைகள் தள்ளி உதயநிதிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.


அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில், தவறாமல் விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. சொந்தத் தொகுதியான திருவல்லிக்கேணி - சேப்பாக்கத்தில், சாலைகள் சீரமைப்பு, மதுக்கடைகள் அகற்றம் எனப் பல மாற்றங்களை கொண்டு வந்ததாக உதயநிதி தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருவது நினைவுகூறத்தக்கது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.