செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்துள்ள புலிப்பாக்கம் மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் இவர் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று புலிப்பாக்கம் பகுதியில் உள்ள, புலிப்பாக்கம் ஏரியில் வழக்கம் போல கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்று நடராஜன் விட்டுள்ளார். வழக்கம்போல மாடுகளை மேய்ந்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக மின்சார ஒயர் அருந்து புலிப்பாக்கம் ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளின் மீது விழுந்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே, நடராஜனின் இரண்டு மாடுகளும் மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்தது.
இதனை அறியாமல் நடராஜன் மேச்சலுக்கு சிறந்த கால்நடைகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர சென்றுள்ளார். அப்பொழுது சென்று பார்த்த பொழுது மாடு மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குறிப்பாக உயிரிழந்த மாடு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கன்று கொட்டியை ஈன்று உள்ளது. இந்நிலையில் மின்சாரம் ஒயர் அறுந்து விழுந்து மாடு உயிரிழந்ததால் நடராஜன் சோகத்தில் அடைந்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக மின்சாரத் துறைக்கு தகவல் தெரிவித்து உயிரிழந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மின்சார ஊழியர்களின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நடைபெற்றது, என நடராஜன் முறையிட்டும் பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளனர்.
தற்பொழுது தாயை இழந்து வாடும் கன்று குட்டியை பார்ப்போர், நெஞ்சை கலங்க வைக்கிறது. மேச்சலுக்கு சென்ற தன்னுடைய தாய் எப்படியும் திரும்பி வந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறது, அந்த கன்று குட்டி. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் மாட்டு உரிமையாளர் நடராஜன். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற கால்நடை மருத்துவர்கள், உயிரிழந்த மாட்டை பிரேத பரிசோதனை செய்ததில் மின்சாரம் தாக்கி மாடு உயிரிழந்ததை உறுதி செய்தனர்.