கரூரில் இயங்கி வந்த அரசு வங்கியின் கட்டடத்துக்கு வாடகை தராததால், கட்டடத்திற்கு உரிமையாளர் பூட்டு போட்டார்.


3 மாதம் பாக்கி:


திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை டிகேடி மில் அருகே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கே முன்பு கட்டிடத்தின் ஒப்பந்த காலம் நிறைவுற்றதாக கூறப்படுகிறது.


இதையடுத்து, ஒப்பந்த காலம் நிறைவடைந்ததையொட்டி வங்கியை காலி செய்து தருமாறு கட்டட உரிமையாளர் கேட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து இது  தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.


அரசு வங்கிக்கு பூட்டு:


இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக வாடகை செலுத்தாமல் பாக்கியை வங்கி நிர்வாகம் வைத்திருந்ததாக தெரிகிறது. இதையடுத்து வங்கி செயல்பட்டு வந்த கட்டடத்தின் உரிமையாளர், வங்கிக்கு நேற்று பூட்டு போட்டார்.




வங்கி பூட்டு போட்டதை பார்த்த வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்  வங்கி தரப்பில் பூட்டு அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மின் இணைப்பையும் கட்டிட உரிமையாளர் துண்டித்தார். இதையடுத்து வங்கி நேற்று மின்சாரம் இன்றி இயங்கியது. வாடிக்கையாளர்கள் மின் வசதி இல்லாததால், திருப்பி அனுப்பப்பட்டனர்.




Also Read: Whatsapp Banking : வந்துவிட்டது வாட்சப் வங்கி: உங்களுடைய வங்கி இப்போது வாட்சப்பிலேயே...சேவைகளைப் பெறுவது எப்படி?


வங்கி அதிகாரிகள் உறுதி: 


இதையடுத்து, கட்டட உரிமையாளரை சந்தித்து, நிலுவை தொகையை செலுத்தி குத்தகை பாக்கியை நிவர்த்தி செய்து தருவதாக வங்கி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.அதையடுத்து வங்கி இயங்கி வந்த கட்டடத்துக்கு மின் இணைப்பை கட்டட உரிமையாளர் வழங்கினார். அரசு வங்கியை தனிநபர் பூட்டிய சம்பவம் பொதுமக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.


Also Read: Bank Holidays September 2022: செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாள் வங்கி விடுமுறை தெரியுமா?


Also Read:மும்பையில் கிரெடிட் கார்டு கேஷ்பேக் மூலம் வங்கி மற்றும் வாடிக்கையாளர்களிடம் ரூ.4 கோடி மோசடி செய்ததாக 41 வயதான முன்னாள் வங்கி ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.