நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இளங்கலை மருத்துவ படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகாமை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 17ஆம் தேதி இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவம் ஆகிய இளங்கலை மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்காக நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத நாடு முழுவதும் 18 லட்சத்து 72ஆயிரத்து 343 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். நீட் தேர்வை மொத்தம் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் எழுதியிருந்தனர் .இந்தத் தேர்வு நாடு முழுவதும் மட்டும் 543 நகரங்களில் அமைக்கப்பட்ட 3800-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதிய நிலையில், 67787  தேர்ச்சி பெற்றதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வின் பொழுது தற்கொலை , சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக நீட் தோல்வி பயம் காரணமாக மாணவ மாணவிகள் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.


 

இந்நிலையில் சென்னை புறநகர் பகுதியான,  திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், சோழபுரம் பகுதியில் லக்ஷனா ஸ்வேதா  என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் கடந்த நீட் 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வந்துள்ளார். பிலிப்பைன்ஸில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்துவந்த நிலையில், ஸ்வேதா இந்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் நீட் தேர்வில் தேர்ச்சி அடையாத காரணத்தினால், ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Suicidal Trigger Warning..

 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

 

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)