• அமலாக்கத்துறை செய்வது சுத்த போக்கிரித்தனம்; ஆம் ஆத்மியை ஒடுக்க நினைக்கும் செயல் - அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்


டெல்லியில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கில் நேற்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போக்கிரித்தனம் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே மதுபானக் கொள்கை வழக்கில்  சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்தர் ஜெயின், டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க..



ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக கடந்த 27ம் தேதி மேட்ரிட் சென்றார். அதன்பிறகு, சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்து திரும்பி இருக்கிறேன். ஸ்பெயின் பயணம் சாதனை பயணமாக அமைந்து இருக்கிறது. ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. ஸ்பெயின் நாட்டில் செயல்படும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித்தனியாக நேரில் சந்தித்தேன். மேலும் படிக்க..



  • முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சல்யூட்! எம்.பி.க்களின் போராட்டத்திற்கு ஆதரவு.. கேரள முதலமைச்சர் நன்றி


மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை மறுநாள் போராட்டம்  கேரளாவின் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளனர். கேரள எம்.பி.க்களின் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த ஆதரவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, நிலங்களின் செயல்பாடு மற்றும் நிதி சுயாட்சி மீதான மத்திய அரசின் பாகுபாடுகளுக்கு எதிராக பிப்ரவரி 8ம் தேதி டெல்லியில் கேரளா நடத்தும் போராட்டத்திற்கு ஒற்றுமை மற்றும் ஆதரவை வழங்கிய மு.க.ஸ்டாலினுக்கு சல்யூட் என்று பதிவிட்டுள்ளார்.மேலும் படிக்க..



  • இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஈரான் செல்ல விசா வேண்டாமா? என்ன மேட்டர்!


இந்தியாவில் இருந்து ஈரான் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின் இந்திய மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என்பது படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கென்று கொரோனாவுக்கு பின் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் மக்கள் அந்நாடுகளுக்கு பயணம் செல்வதை தவிர்த்து வந்தனர். இதனால் சம்பந்தப்பட்ட நாடுகளில் சுற்றுலா மூலம் வரும் வருவாய் ஆனது பெரும் சரிவை சந்தித்தது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கென்று பல சலுகைகளை அறிவித்து வருகிறது.  மேலும் படிக்க..



  • சரத் பவாருக்கு பேரிடி.. தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம்? தேர்தல் ஆணையம் அதிரடி


கடந்தாண்டு, மகாராஷ்டிர அரசியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறியது. எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டு இரண்டாக உடைந்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள், சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தனர். மேலும் படிக்க..