Breaking LIVE: விருதுநகரில் சரவெடி பட்டாசு தயாரிப்பை தடுக்க குழு - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

Breaking News LIVE Updates: இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

ABP NADU Last Updated: 22 Mar 2022 05:34 PM
விருதுநகரில் சரவெடி பட்டாசு தயாரிப்பை தடுக்க குழு - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் சரவெடி பட்டாசு தயாரிப்பை தடுப்பதற்காக குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வருவாய், காவல், தீயணைப்பு மற்றும் தொழிலக பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

BREAKING News LIVE: மேகதாது அணை - தமிழ்நாட்டிற்கு எதிராக கர்நாடகா தீர்மானம்

மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு நேற்று தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தற்போது அதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநிலம் முடிவு செய்துள்ளது.  

கொரோனா தொற்று - மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கை கழுவுதல், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை தொடர்ந்து மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

அகிலேஷ் யாதவ் எம்பி பதவியை ராஜினாமா செய்தார்

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் கர்ஹால் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் அகிலேஷ் தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அளித்தார்

நாகை: 47 நெல் மூட்டைகள் திருட்டு

நாகை அருகே பட்டமங்கலம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் 47 நெல் மூட்டைகள் திருட்டு: பட்டியல் எழுத்தர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை

நீட் தேர்வு : கிராமப்புற மாணவர்களின் விவரம் இல்லை - ஆர்.டி.ஐ கேள்வியில் தேசிய தேர்வு முகமை பதில்..

நீட் தேர்வு : கிராமப்புற மாணவர்களின் விவரம் இல்லை - ஆர்.டி.ஐ கேள்வியில் தேசிய தேர்வு முகமை பதில்..



 


 
தடுப்பூசி போடாதவர்களால்தான் கொரோனா வைரல் உருமாற்றம் நடைபெறுகிறது என தமிழக அரசு வாதம்

தடுப்பூசி கட்டாயம் என பல மாநில அரசுகள் அறிவித்திருந்தற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தடுப்பூசி போடாதவர்களால்தான் கொரோனா வைரல் உருமாற்றம் நடைபெறுகிறது என தமிழக அரசு வாதம்

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 64 புலிகள் கொல்லப்பட்டுள்ளன - மக்களவையில் மத்திய வனத்துறை அமைச்சகம் தகவல்..

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 64 புலிகள் கொல்லப்பட்டுள்ளன - மக்களவையில் மத்திய வனத்துறை அமைச்சகம் தகவல்..

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு - மாநிலங்களவையில் அமளி.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு - மாநிலங்களவையில் அமளி.

பீஸ்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் உலகெங்கும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

பாலியல் கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - கனிமொழி, எம்.பி

பாலியல் கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - கனிமொழி, எம்.பி

வெள்ளி விலை நிலவரம்..

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.40க்கு விற்பனை. ஒரு கிலோ வெள்ளி ரூ.73400க்கு விற்பனையாகிறது

தங்கம் விலை உயர்வு.. இன்றைய நிலவரம்..

சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 38624க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4828க்கு விற்பனை - நேற்றைய விலையை விட சவரனுக்கு 280 ரூபாய் அதிகம்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும் - யூ.ஜி.சி

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும் - யூ.ஜி.சி

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

மார்ச் -31 அன்று தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளின் மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்

உடனடி தகவல் தேவை.. மீனவர்களுக்கு கோரிக்கை

சந்தேகப்படும் படியான படகுகளை, நபர்களை கடலில் கண்டால் உடனடியாக கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களுக்கு கோரிக்கை

இலங்கையில் இருந்து மீண்டும் அகதிகள் வருகை

பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வால் இலங்கையிலிருந்து மேலும், 50க்கும் மேற்பட்டோர் தப்பி தமிழகம் வருவதாக தகவல்; கடரோட காவல்படை தீவிர ரோந்து 

நாகாலாந்து மாநிலத்திலிருந்து பாஜகவின் முதல் பெண் எம்.பி! போட்டியின்றி தேர்வானார் பேங்னான் கோன்யாக்

ஒரேயொரு எம்.பி.  பதவி கொண்ட நாகாலாந்தில் அதற்கான தேர்தல் இம்மாதம் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் தன்னை எதிர்த்து போட்டியிட யாரும் இல்லாததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாகாலாந்து மாநிலத்திலிருந்து பாஜகவின் முதல் பெண் எம்.பி! போட்டியின்றி தேர்வு

நாகாலாந்து மாநிலத்திலிருந்து பாஜகவின் முதல் பெண் எம்.பி! போட்டியின்றி தேர்வானார் பேங்னான் கோன்யாக்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு  -  விநாடிக்கு 786 கன அடியில் இருந்து 948 கன அடியாக  அதிகரித்துள்ளது

5 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

தருமபுரியில் போலி நகையை கொடுத்து பெண்ணை ஏமாற்றி 5 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

சமையல் எரிவாயு விலை உயர்வு

சமையல் எரிவாயு விலை ஒவ்வொரு மாதமும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று மார்ச் மாதத்திற்கான புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, 967.50 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையாகிறது.

நட்சத்திர வீரர் லக்சயா சென் விலகல்

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் இருந்து இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென் விலகல்

சீல் வைக்க தமிழக அரசு முடிவு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளுக்கு சீல் வைக்க தமிழக அரசு முடிவு

இன்றும் ஆஜராகும் ஓபிஎஸ்

ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்றும் ஆஜராகும் ஓபிஎஸ் - நேற்று 78 கேள்விகளுக்கு பதில் அளித்ததாக தகவல்

பெட்ரோல் விலை உயர்வு..

சென்னையில் 137 நாட்களுக்கு பிறகு, பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.16க்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 92.19 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

உத்தரகண்ட் முதல்வர்..

உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் பொறுப்பேற்பார் என பாஜக அறிவிப்பு

Background

Breaking News LIVE Updates:


சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.16க்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 92.19 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்தனர். பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.