பாஜக தலைமையிலான மத்திய அரசின், புதிய மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு , தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திருமண மேடையில் மணமக்களை வாழ்த்தும் வகையில், அரசியல் மேடையாக மாற்றியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். முதல்வரின் பேச்சானது டெல்லி வரை எதிரொலித்து வலம் வர ஆரம்பித்துவிட்டது.
திருமண மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின்:
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இன்று நாகை மாவட்ட செயலாளர் என். கௌதமன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, “ இத்திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். இந்த திருமணத்தில், மணமக்களிடம் அன்போடு கேட்டுக் கொள்வது என்னவென்றால், முன்பு எல்லாம், குழந்தைகளை அதிகம் பெற்றுக் கொள்ள வேண்டாம்; அவசரப்பட வேண்டாம்; பொறுமையாக இருங்கள் என்று எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால், இப்போது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; சொல்லவும் கூடாது.
உடனே குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்
ஏனென்றால், மக்கள் தொகை அடிப்படையில்தான் எம்.பிக்களின் எண்ணிக்கை வரும் என்ற நிலை உருவாகியுள்ளது. மக்கள் தொகை எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அதிக எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகமாக வரும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஆனால், நாம் மக்கள் தொகை குறைப்பு செய்யும் வகையில் குடும்ப கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இறங்கி , மக்கள் தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம்; அதில் வெற்றியும் கண்டு வந்தோம். இதனால், நமக்கு எம்.பிக்களின் குறையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதனால், தற்போது உடனடியாக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், பெற்றுக் கொள்ளக்கூடிய குழந்தைகளுக்கு , அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். இது தான் எனது அன்பான வேண்டுகோள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Also Read: 2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
திருமண மேடையை அரசியல் மேடையாக்கிய ஸ்டாலின்
மத்தியில் இருக்கும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசானது, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி , மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதனால், மக்கள் தொகை கட்டுப்படுத்தாத மாநிலங்களான உத்திர பிரதேசம் , மத்திய பிரதேசம் , பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகமாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எம்.பி-க்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.
இதனால், எம்.பி-க்களின் எண்ணிக்கை குறையும் மாநிலங்கள், நாடாளுமன்றத்தில் தங்களது பிரதிநிதித்துவம் குறையும் என்று கவலையில் உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் , மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாகையில் திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், திருமண விழா மேடையில் மணமக்களை வாழ்த்தும் வகையில், அரசியல் கலந்து பேசி, திருமண ,மேடையை அரசியல் மேடையாக மாற்றிவிட்டார். முதலமைச்சர் ஸ்டாலின், மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசியது , டெலி வரை எதிரொலித்ததாகவு, பாஜகவினர் இதுகுறித்து பேசியிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.