உலகள அளவில் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையிலான சந்திப்பானது இன்று நடைபெற்றது. அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவகத்தில் சந்திப்பானது நடைபெற்றது. அப்போது , உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏன் கோட் சூட் அணியவில்லை என்ற செய்தியாளரின் கேள்வியானது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மோதலான டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பு:
அப்போது, இரு நாட்டு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பானது, செய்தியாளர்கள் முன்னிலையிலேயே நடைபெற்றது. ஆனால், இந்த சந்திப்பானது, உலகளவில் யாரும் எதிர்பார்க்காத சந்திப்பாகவும், வரலாற்றில் நினைவு கொள்ளும் வகையிலாகவும் அமைந்துவிட்டுது என்றே சொல்லலாம்.
இருவரின் பேச்சுகளானது, மோதல் போக்கு போன்றே காட்சியளித்தன. யுக்ரைன் போருக்கு, அமெரிக்கா அதிகளவு உதவி செய்துள்ளது. எப்போதாவது, நன்றியுள்ளவர்களாக இருந்துள்ளீர்களா என்றும், மூன்றாம் உலக போருக்கு வழி ஏற்படுத்துகிறீர்களா என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் கேட்டார். உங்களிடம், இந்த விளையட்டில் விளையாட, ஏதும் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
நான், உக்ரைன் நாட்டின் அதிபர். நான் விளையாடவில்லை, நான் உறுதியாக இருக்கிறேன் என ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ரஷ்யா – யுக்ரைன் போர் நிறுத்த விவகாரத்தில், கட்டுபாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும், இல்லையென்றால், ரஷ்யாவை நம்ப முடியாது எனவும் யுக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய சந்திப்பானது, ஜெலன்ஸ்கியை , அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் மிரட்டுவது போன்று பேசியதாக பார்க்கப்படுகிறது. ஜெலன்ஸ்கியும் கோபத்துடனே பேசினார்.
ஏன் கோட் சூட் அணியவில்லை
அப்போதைய சந்திப்போன்போது, செய்தியாளர் ஒருவர் , உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் , “ ஒரு நாட்டின் அதிபரை சந்திக்க வரும் போது , ஏன் கோட் சூட் அணியவில்லை எனவும், எப்போதும் இதே போன்ற ஆடையை அணிகிறீர்கள் என்பது போன்றும் கேள்வியை எழுப்பினார். உக்ரைன் அதிபர், பெரும்பலும் கருப்பு டீ சர்ட்டுடனே வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு ஜெலன்ஸ்கி பதிலளித்ததாவது, “ போர் நிறுத்தப்பட்டால், வேறு உடை அணிவேன். அந்த ஆடை, சிறப்பானதாகவும், ஏன் உங்களை போன்றும் கூட இருக்கலாம் என தெரிவித்தார்.
ஆடை குறித்த கேள்விக்கு ஜெலென்ஸ்கி பதிலளித்தவுடன், "நீங்கள் அனைவரும் இன்று ஆடை அணிந்திருக்கிறீர்கள்" என்று கிண்டலாகவும் கோபத்துடனும் டிரம்ப்பும், கூறியதாக வெளிநாட்டு செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன.
கோர்ட் சூட் அணியாததுதான் பிரச்னையா?
இந்நிலையில், ஒரு வெளிநாட்டு தலைவரிடம் ஆடை குறித்தான செய்தியாளர்களின் கேள்வியானது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரு நாடுகளின் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், உடை குறித்து பேசுகின்றனர் என்றும் பலர் கண்டித்து வருகின்றனர்.