Road Accident : பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து! பயணிகளின் நிலை என்ன? முழு விவரம்

Road accident : சென்னையில் இருந்து திருப்பத்தூருக்கு பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர உள்ள 30 அடி விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Continues below advertisement

திருப்பத்தூரில் இரு வேறுஇடங்களில் நிகழ்ந்த சாலைவிபத்தால் 10 பேர் காயமடைந்தனர். 

Continues below advertisement

பேருந்து விபத்து: 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் பகுதியில் இன்று (17.01.2025) சென்னையில் இருந்து திருப்பத்தூருக்கு பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர உள்ள 30 அடி விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் 10 பயணிகள் காயமடைந்து நிலையில், அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் அவர்களை சிகிச்சைக்காக  திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த  போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் விபத்து குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏலகிரி மலை: 

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள சுற்றுலா தளமான ஏலகிரி மலைக்கு திருப்பத்துார் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

குறிப்பாக விடுமுறை நாட்கள்,பண்டிகை காலங்களில் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையால் ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து சென்றனர்

இதையும் படிங்க: Erode By electon : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக vs நாதக.. விலகிய பாஜக, அதிமுக.. வேட்புமனுவுக்கு இன்றே கடைசி நாள்

சுற்றுலா வேன்: 

இந்த நிலையில் வேலுார் தொரப்பாடியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர் நேற்று காலை(16.01.25) சுற்றுலா வேனில் ஏலகிரி மலைக்கு வந்தனர். சுற்றுலா வேனை வேலுாரை சேர்ந்த நசீர்(47). என்பவர் ஓட்டி வந்துள்ளார். தொடர்ந்து ஏலகிரி மலையில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து கண்டு கழித்த அவர்கள் இரவு மலை உச்சியில் இருந்து கீழே இறங்கினர். 

இதையும் படிங்க: லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 4 பேர் பலி! சித்தூர் அருகே சோகம்

மரத்தில் மோதிய வேன்: 

அப்போது 4வது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் வளைக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தடுப்புச்சுவரை உடைத்து மரத்தின் மீது மோதி வேன் நின்றது.இந்த விபத்தில் 14 பேர் அதிர்ஷ்டசமாக  அனைவரும் காயமின்றி உயிர்தப்பினர்.



போலீசார் விசாரணை: 

தகவலறிந்த ஏலகிரி மலை போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola