திருவண்ணாமலையில் அமைந்துள்ளது ஆரணி. இங்குள்ள களத்துமேட்டு தெருவில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இங்கு கடந்த 8-ந் தேதி நடைபெற்ற திருவிழாவின் ஒரு பகுதியான மாரியம்மன் கூழ்வார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.






கூழ்வார்க்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு கபடி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, போட்டியில் பங்கேற்பதற்காக கே.எஸ். கபடி அணியினர் தீவிர பயிற்சி எடுத்து வந்தனர். அப்போது, அந்த அணியைச் சேர்ந்த வீரரான வினோத்குமார் பொதுமக்கள் முன்னிலையில் கரணம் ( பல்டி) அடித்து பயிற்சி எடுத்து வந்துள்ளார்.




அவர் தொடர்ந்து கரணம் அடிப்பதை அங்கிருந்த பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்து ஆரவாரம் செய்தும், கைதட்டியும் உற்சாகப்படுத்தியுள்ளனர். அப்போது, மிகுந்த உற்சாகத்துடன் கரணம் அடித்துக்கொண்டிருந்த வினோத்குமார் திடீரென முதல் கர்ணம் அடித்து, இரண்டாவது கர்ணம் அடிக்கும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.


மேலும் படிக்க : Vijayakanth Flag Hoist: ஹெலிகாப்டரில் தேசியக்கொடியை பறக்கவிட்ட கேப்டனா இது? கதறி அழுத தொண்டர்கள்! நடந்தது என்ன?


இதைக்கண்ட அங்கே இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, அவரைப் பார்த்தபோது அவர் மயக்கமான நிலையில் இருந்தார். உடனடியாக பொதுமக்களும், கபடி வீரர்களும் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மிகுந்த ஆரோக்கியமாக இருந்த கபடி வீரர் கர்ணம் அடித்தபோது மயக்கம் அடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் பன்ருட்டியில் கபடி போட்டியின்போது விளையாடிக்கொண்டிருந்த இளம் கபடி வீரர் திடீரென களத்திலே உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக விளையாட்டு வீரர்கள் பலரும் இளம் வயதிலே உயிரிழப்பது விளையாட்டு உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : Madurai ; 50 பேரன் பேத்திகளுடன் 90வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய மூதாட்டி !


மேலும் படிக்க : ஆசிரியர்களின் கோரிக்கையை கேட்க ‘ஆசிரியர் மனசு’: வாக்குறுதி அளித்த அன்பில் மகேஷ்...!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண