Independence Day: சென்னை திருவான்மியூரில் புதிய பூங்காவை திறந்து வைத்து பெயர் சூட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் வரை புதிதாக கட்டப்பட்டுள்ள பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், பக்கிங்காம் கால்வாயினையொட்டி சுமார் 2.1 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பூங்காவை முதல்வர் பார்வையிட்டு பூங்காவிற்கு ” சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா பூங்கா” எனப் பெயரிட்டார். நகர்புற சாலை மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட 18.71 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பூங்காவில், குழந்தைகள் விளையாட விளையாட்டு மைதானம், சைக்கிள் செல்ல பாதை, நடை பாதை ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அடையார் முதல் திருவான்மியூர் வரை அமைக்கப்பட்டுள்ள பூங்காவைத் திறந்து வைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்