எளிய மக்கள் மீதான தாக்குதல்களும், அவர்களை மனிதர்களாக நினைக்காததன்மையும் சமூகத்தில் விஷம் போல் பரவிவருகிறது. குறிப்பாக அரசாங்க ஊழியர்கள் தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை கிராமங்களில் வசிக்கும் எளிய மக்கள் மீதே நிகழ்த்தி காட்டுகின்றனர்.
சாலையோர வியாபாரிகள், காய்கறிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஏற்றி செல்பவர்கள் என பலர் அரசாங்க ஊழியர்களின் அவமதிப்புக்கும், அலட்சியத்திற்கும் ஆளாகின்றனர்.
அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வாணியகுடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வ மேரி என்ற மூதாட்டி. இவர் மீன் வியாபாரம் செய்துவருகிறார்.
செல்வ மேரி மீன் விற்பதற்காக அரசு பேருந்தில் சென்றபோது துர்நாற்றம் வீசுவதாக அவரை பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ”இது என்ன அநியாயம் அநீதி. மாலை 7.45 மணிக்கு எடுக்கும் பேருந்திலிருந்து இறக்கிவிட்டார்கள். நிச்சயம் நான் புகார் கொடுப்பேன். துர்நாற்றம் அடிக்கிறது இறங்கு இறங்கு என சொன்னார்கள்” என கண்ணீரோடு கதறும் காட்சி பார்ப்போரை கலங்க வைக்கிறது. இந்த வீடியோவை அதிகளவு பகிர்ந்து தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகிறார்கள்.
இதனையடுத்து மூதாட்டியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநர் மணிகண்டன், ஓட்டுநர் மைக்கேல், நேர காப்பாளர் ஜெயக்குமார் ஆகிய மூன்று பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் என்ற நடைமுறை தமிழ்நாட்டில் இருக்கும்போது ஒரு பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட சம்பவம் நிச்சயம் தலைகுனிய வேண்டியதே.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: மயானத்திலும் விடாத சாதி.. அத தூக்குங்க முதல்ல.. அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்
13 மாதங்களில் 57 நாய்களின் இறப்பு.. ஐஐடியில் நடப்பது என்ன? கால்நடை பராமரிப்புத் துறை சொல்வது என்ன?
சிட்கோ தொழில்மனைகளின் விலை குறைப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Cho Ramaswamy: “ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது” - அரசியலில் யாரையும் விட்டுவைக்காத சோ ராமசாமி!