கிண்டியில் இயங்கிவரும் ஐஐடி வளாகத்தில் மான்களும், நாய்களும் வசிக்கின்றன. இந்தச் சூழலில் ஐஐடியில் இருக்கும் நாய்கள் எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ஐஐடி வளாகத்தில் இருக்கும் மான்களை காப்பாற்றவே நாய்கள் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து ஐஐடிக்கு கண்டனங்கள் வலுத்தன.


மேலும், பெங்களூருவைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ஹரிஷ் கடந்த அக்டோபர் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்தப் புகாரில், “கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் சுற்றித்திரிந்த 186 நாய்களில் 40க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்ததற்கு உரிய பராமரிப்பு அளிக்கத் தவறிய பதிவாளர் ஜேன் பிரசாத் மற்றும் உடனிருக்கும் சில ஊழியர்களே காரணம். அவர்கள் மீது மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.




விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஐஐடிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மீதமிருக்கும் நாய்களின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்வதற்கு அமைச்சரைத் தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஐஐடி வளாகத்திற்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு அவர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒரு குழுவினர் போராட்டம் நடத்தினர்.




இந்நிலையில் நாய்கள் இறப்பு தொடர்பாகவும், நாய்களின் நிலை குறித்தும் கால்நடை பராமாரிப்புத் துறை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில், “ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் 13 மாதங்களில் 57 நாய்கள் இறந்தன; காவலில் உள்ள நாய்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது சமீபத்திய ஆய்வின்போது தெரியவந்தது” என கூறியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: எலும்பும் தோலுமான படங்கள்; ஐஐடி மெட்ராஸில் உணவு தரப்படாமல் நாய்கள் சித்ரவதை செய்யப்படுகிறதா?


IIT Madras Stray Dog Issue: மான்களைக் காப்பாற்ற 45 நாய்கள் கொலையா? விஸ்வரூபம் எடுக்கும் சென்னை ஐஐடி விவகாரம்!!


’வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக...’ முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளித்தார் பிரபாஸ்


தடுப்பூசி வழங்கலில், சாத்தியமில்லாத இலக்குகளை நிர்ணயித்து அழுத்தம் தரக்கூடாது - ராமதாஸ்