சாதிப்பாகுபடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை அமைக்க வேண்டும் என்றும், பொதுவான மயானங்களை அமைத்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டுமென்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


கேப்டன்சியை பகிர்ந்தளிக்கும் திட்டத்தில் பிசிசிஐ: ஒரு நாள் போட்டிக்கான் கேப்டனாக ரோஹித்! 


கள்ளக்குறிச்சி மடூரில் அருந்ததியர் சமுதாயத்தினருக்காக மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கோகுலக் கண்ணன் எனபவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார், அதில் எங்கள் கிராமத்தில் அருந்ததியினருக்கு தனி மயானம் அல்ல. புறம்போக்கு நிலத்தில் சடலத்தை எரியூட்டி வருகிறோம். எனவே தனி மயானம் அமைக்க உத்தரவிடவேண்டும் என்றார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இதற்கு பதிலளித்த அரசு தரப்பு மயானத்துக்கான இடத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர். இருதரப்பையும் கேட்ட நீதிபதி, மடூரில் பொதுவான மயானம் அமைக்க இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்


கிராமங்களில் மயானம் என்பது இன்றளவும் பெரிய பிரச்னையாகவே உள்ளது. சில சமூகங்களுக்கு மயானம் கூட இல்லாத நிலை நிலவுகிறது. சில மயானங்களை மழைக்காலங்களில் சென்று சேர முடியாத நிலையும் உள்ளது. சமீபத்தில் கடலூர், இளமங்கலம் கிராமத்தில் வசித்துவரும் மதியழகன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால்  உயிரிழந்தார். அக்கிராமத்திள் உள்ள சின்ன ஓடை, பெரிய ஓடை என இரண்டு முக்கிய ஒடைகளிலும் வெள்ள நீரானது அக்கிராம விளை நிலங்கள் மற்றும் சுடுகாடு பகுதி முழுவதையும் சூழ்ந்தது. இதனால் உயிரிழந்தவரின் உடல்களை எரிக்க வழியின்றி தவித்து வருகின்றனர். இதனையடுத்து நேற்று உயிரிழந்த ராஜேஸ்வரியின் உடலை புதைக்கவோ, எரிக்கவோ இடம் இல்லாததால் வேறு வழியின்றி அக்கிராம குடியிருப்பு பகுதி அருகில் கட்டைகளை ராஜேஸ்வரியின் உடல் எரிக்கப்பட்டது.


கோச் ஆன தருணம்.. பயங்கர நெருக்கடி... மனம் திறந்த ரவிசாஸ்திரி !







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண