தமிழ்நாடு சிட்கோ மனைகளின் விலையை குறைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொழில் முனைவோர்கள் எளிதில் வாங்கிடும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டினை தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைகளை ஊக்குவிக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


தொழில்மனைகளின் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு தொழிற்பேட்டைகளில் மனைமதிப்பு தொழில்முனைவோர் எளிதில் வாங்கிடும் அளவில் குறைந்துள்ளது. உதாரணமாக,  ஊத்தங்கரை தொழிற்பேட்டையில் ஏக்கர்  ஒன்றிற்கு ரூபாய் 1,19,79,000 ரூபாயிலிருந்து 75% குறைத்து ரூபாய் 30,81,200ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.


கும்பகோணத்தில் ரூபாய் 3,04,92,000 ரூபாயிலிருந்து 73% குறைத்து ரூபாய் 81,89,300ஆகவும், நாகப்பட்டினத்தில்  ரூபாய் 2,39,71,500 ரூபாயிலிருந்து சுமார் 65% குறைத்து ரூபாய் 85,35,800ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோவை குறிச்சியில் ஒரு ஏக்கர் நிலம் 9 கோடி ரூபாயிலிருந்து 4.8 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டு 4.2 கோடி ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


செங்கல்பட்டு ஆலத்தூரில் ஒரு ஏக்கர் நிலம் 6 கோடி ரூபாயிலிருந்து 2.5 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு 3.5 கோடி ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ஈரோடு தொழிற்பேட்டையில் ஒரு ஏக்கர் நிலம் 6.4 கோடி ரூபாயிலிருந்து 2.6 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு 3.8 கோடி ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


திருப்பத்தூர் விண்ணமங்கலத்தில் ஒரு ஏக்கர் நிலம் 4 .8 கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.


காரைக்குடி பிடாநேரி, ராஜபாளையம்  தொழிற்பேட்டையில் மனைகளின் விலை 30 சதவீதம் முதல் 54 சதவீதம்வரை குறைக்கப்பட்டுள்ளது.


விருதுநகர், அரக்கோணம், பர்கூர் தொழிற்பேட்டையில் மனை மதிப்பு 40 சதவீதம் முதல் 50 சதவீதம்வரை குறைக்கப்பட்டுள்ளது.


மேலும், 19 தொழிற்பேட்டைகளின் மனை மதிப்பு 5 சதவீதத்திலிருந்து  25 சதவீதம்வரை குறைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Super Saravana Stores: ரூ.1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: சரவணா ஸ்டோர்ஸ் ரெய்டில் அம்பலம்!