நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை  தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றது.


ஏப்ரல் 17ம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்த நிலையில் விவேக் இறப்பு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரும் தெரிவிக்கப்பட்டது.  விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் அனுப்பிய அந்த புகாரில், ‛நல்ல உடல்நலத்துடன் இருந்து வந்த நடிகர் விவேக், கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்ட பிறகு இறந்திருக்கிறார் என்றும்,  அதுகுறித்து  மத்திய அரசு விசாரணை நடத்த மத்திய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும், தனது தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம். 



முன்னதாக, மருத்துவமனையில் அவருக்கு எக்மோ பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஏப்ரல் 17 காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார். இதனை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய விவேக்கின் மரணத்தில் கொரோனா தடுப்பூசி சர்ச்சையும் எழுந்தது. இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்புதான் விவேக் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தார். இது குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்த நிலையில்  விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதற்கும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சுகாதாரத்துறை செயலர் அப்போது தெரிவித்திருந்தார். 


Rahul Gandhi: 70 வருடங்களாக எதுவும் நடக்கவில்லையா? விற்க நினைக்கும் சொத்துக்கள் எப்படி வந்தன! - ராகுல் காந்தி குற்றச்சாட்டு


விவேக் மரணித்தபோது அது குறித்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், " அண்ணார் விவேக் மரணத்துக்கும், கொரோனா தடுப்பு மருந்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. விவேக் அவர்கள் திரைப்படங்கள் மூலமாகவும், தனிமனித ரீதியாகவும் மூட நம்பிக்கைகளையும், தேவையற்ற நம்பிக்கைகளையும் எதிர்த்தவர். அந்த ஆத்மாவுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றால், பொய் பிரச்சாரங்களை தூரப் போடவேண்டும். இன்னும் சொல்லப்போனால், கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வுதான் விவேக் அவர்கள் நமக்கு அளித்த கடைசி மெசேஜ்.  தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பினால் பொது சுகதாரச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். சமூக ஊடகங்களில் தவறான கருத்தை பதிவிட்டால் சைபர் கிரைம் பிரிவின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படும்" என்று தெரிவிதிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


வழிபாட்டு தலங்களில் வெள்ளி,சனி, ஞாயிறு தடை தொடரும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு