தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையானது, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைவது வழக்கம். ஆனால்,வடகிழக்கு பருவ மழையானது ஜனவரி மாதத்திலும் தொடர்ந்து நீடித்து வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், 7 நாட்களுக்கு , தமிழ்நாட்டின் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.



கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 21-01-2025 மற்றும்  நாளை 22-01-2025: தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.


Also Read: PM Modi-Trump Inauguration: சீனாவுக்கு அழைப்பு; மோடிக்கு இல்லை.! நண்பரை, டிரம்ப் அழைக்காதது ஏன்?


23-01-2025. தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.


24-01-2025 முதல் 27-01-2025 வரை; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


இன்று (21-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


நாளை (22-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நாளை காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Also Read: Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?


மீனவர்களுக்கு எச்சரிக்கை:


21-01-2025 மற்றும் 22-01-2025 தென்தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.