பெரியார் குறித்த சீமான் பேச்சு - ஆதாரம் வேண்டும்

சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் ஜனநாயக கூட்டமைப்பு இயக்கங்கள் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, 

Continues below advertisement

தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய சமூகப் பிரச்சனை சூழலியல் பிரச்சனை சாதி பிரச்சினைக்கு எதிராக ஏதாவது இந்துத்துவாவோ சங்கிகளோ குரல் கொடுத்தது கிடையாது. தொடர்ச்சியாக களத்தில் போராடிக் கொண்டிருப்பது ஜனநாயக அம்பேத்கரிய மார்க்சிய ஜனநாயக அமைப்புகள் தான். 

சீமான் வீட்டை முற்றுகை இடக்கூடிய அளவிற்கு ஏன் செல்ல வேண்டும் என்றால் 20 நாட்களாக ஆதாரங்கள் கொடுக்க வேண்டும் என கேட்டு விட்டோம் ஆதாரம் கொடுக்காமல் தொடர்ச்சியாக பெரியார் மீது அவதூறை பேசி வருகிறார். பரப்பும் அவதூருக்கு பொறுப்பு எடுக்க மாட்டேன் ஆதாரம் தரமாட்டேன் என்று சீமான் இருக்கிறார்.

Continues below advertisement

மிகப் பெரிய தலைவர் குறித்து அவதூறு பரப்பும் சீமானால் நாளைக்கு சாமானிய மக்களுக்கு கூட எது வேணாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. 

சீமான் வீரம் மைக் முன்னாடி மட்டும் தான்

திமுகவிற்கு எதிராக எத்தனை போராட்டங்களை சீமான் நடத்தி இருக்கிறார் ? சீமானின் வீரமெல்லாம் மைக்கு முன்னாடி மட்டும். தொடர்ச்சியாய் பொய் பேசி சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது எனவேதான் நாளை சீமான் வீட்டை முற்றுகை இடுகிறோம். தமிழ்நாட்டில் பெரியாரை இழிவாகப் பேசி வாக்கு வாங்கி விட முடியும் என்பதை காட்டுவதற்காக சீமான் பெரியார் குறித்து அவதூறாக பேசுகிறார்.

கோமியம் குறித்து ஐஐடி இயக்குனர் காமக்கொடி பேசியது குறித்து ,

சிறுநீர் என்பது கழிவாக வெளியேற்றப்படுவது. அதை யாராவது குடிப்பார்களா ?  இது முட்டாள் தனத்தின் அப்பட்டமான வெளிப்பாடு. ஐஐடி என்றால் அறிவாளி கிடையாது. இந்தியாவுக்காக எதையும் கண்டுபிடிக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவர்களாவது ராக்கெட் விட்டிருக்கிறார்கள் என்றார்.