Just In





PM Modi-Trump Inauguration: சீனாவுக்கு அழைப்பு; மோடிக்கு இல்லை.! நண்பரை, டிரம்ப் அழைக்காதது ஏன்?
PM Modi-Trump Inauguration: பிரதமர் மோடியை, மை டியர் பிரண்டு என அழைத்துக் கொள்ளும் டிரம்ப் , அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் அழைக்கப்படவில்லை.

உலகின் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் முதல் இடத்தில் இருக்கும் நாடு அமெரிக்கா. இத்தகைய சக்திவாய்ந்த நாட்டின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் , இந்திய நேரப்படி நேற்றைய இரவு சுமார் 10.30 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, துணை அதிபராக ஜே.டி வேன்ஸ் பதவியேற்றுக் கொண்டார்.
அதிபர் டிரம்ப் விழா:
இவ்விழாவானது, கேபிட்டல்ஸ் என அழைக்கப்படும் அமெரிக்க பாராளுமன்றத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில், முன்னாள் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ் , பிற நாட்டுத் தலைவர்கள், பணக்காரர்கள் மற்றும் டிரம்ப் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். மேலும், இந்தியாவின் டாப் பணக்காரரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியும், அவரது மனவி நீதா அம்பானியும் பங்கேற்றனர். அம்பானி சார்பில், இவ்விழாவிற்கு சுமார் 8 கோடி நன்கொடையாக கொடுத்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

ஆனால், இவ்விழாவில் டிரம்ப்பின் நெருங்கிய நண்பராக பார்க்கப்பட்ட பிரதமர் மோடி, கலந்து கொள்ளாதது பெரும் ஆச்சர்யத்தை எழுப்பியுள்ளது.
Also Read: Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?
பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தலைவர்கள்:
அமெரிக்க நாட்டில் வழக்கமாக, அதிபர் பதவியேற்பு விழாவில் உலகத் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படமாட்டாது, அதிகாரிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படுவது வழக்கம். ஆனால், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக, இம்முறை வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பானது விடுக்கப்பட்டது. இவ்விழாவில் , 8 உலகத் தலைவர்களுக்கு அழைப்பானது விடுக்கப்பட்டிருப்பதாக அல்ஜைரா சர்வதேச செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. அதில்
சீன அதிபர் ஜி ஜின்பிங்,
அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே,
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி,
ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன்,
ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவா,
எல் சால்வடார் அதிபர் நயீப் புகேலே,
பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ,
முன்னாள் பொலிஷ் பிரதமர் மொராவீக்.
ஆகிய 8 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சீனா அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை, அதற்குப் பதிலாக துணை அதிபர் ஹான் ஜெங் பங்கேற்க அனுப்பப்பட்டிருக்கிறார்.
Also Read: Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன?
ஏன் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கவில்லை?
இந்நிலையில் பிரதமர் மோடி, ஏன் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது. மை டியர் பிரண்டு என அழைத்துக் கொள்ளும் அளவிற்கு இருந்த நட்புக்குள் என்ன நடந்தது? இந்தியாவின் மீது டிரம்ப்புக்கு கோபமா என்றும் கேள்வியும் எழுகிறது.
ஆனால், இந்தியாவின் மீது டிரம்ப்புக்கு கோபம் இருக்க வாய்ப்பு இல்லை, ஏனென்றால் இந்தியா பொருளாதார ரீதியாக டாப் 5 இடத்திற்குள் உள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவை புறந்தள்ள , டிரம்ப் நினைக்க மாட்டார், மாறாக நட்புடன்தான் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்புறம் ஏன் மோடி அழைக்கப்படவில்லை என பார்க்கையில், பிரிக்ஸ் கூட்டமைப்பானது டாலருக்கு எதிராக புதிய நாணயத்தை உருவாக்குவது குறித்து பேசியது, டிரம்ப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தியா , புதிய நாணயம் குறித்தான நகர்வுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. அப்படியென்றால் ,சீனாவும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ளது, சீன அதிபருக்கு ஏன் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதுகுறித்து சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கையில், கடந்த தேர்தலில் டிரம்ப்புக்கு வெளிப்படையாக மோடி ஆதரவு தெரிவித்ததாக பார்க்கப்பட்டது, இந்தியாவில் நமஸ்தே டிரம்ப் என்ற ஒரு நிகழ்ச்சியானது , பிரதமர் மோடி நடத்தினார். இது டிரம்ப்புக்கு, மோடி வாக்கு சேகரிக்கும் வகையிலும் இருந்ததாகவே பார்க்கப்பட்டது. ஆனால் , கடந்த தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தார். இதனால் புதிய பைடன் அரசுடன் , இந்தியா நெருக்கமாக பழக, சற்று நெருடல் இருந்ததாக பார்க்கப்பட்டது.
அதனால் , இந்த முறையும் அவ்வப்போது கருத்து கணிப்புகள் கமலா ஹாரீஸ் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக இருந்தது. இதனால், தேவையில்லாமல், மற்ற நாடுகளில் அரசியலில் தலையீடு செய்ய வேண்டாம் என்ற நிலைப்பாட்டை மோடி எடுத்தார். ஆனால், நெருங்கிய நண்பர் மோடி, இந்தியர்களிடம் வாக்கு சேகரிக்கவில்லை என்ற கோபம் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால்தான் மோடியை அழைக்கவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றன்.
மேலும், 2வது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப்பின் முதல் வெளிநாட்டு பயணமாக, அமெரிக்காவின் எதிரி நாடாக பார்க்கப்படும் சீனாவுக்கும் , அதற்கடுத்துதான் இந்தியாவுக்கும் பயணம் செய்யவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
டிரம்ப் -மோடி இடையிலான முன்பு இருந்த நட்பு தொடருமா என்றால் சந்தேகம்தான், ஆனால் இந்தியா நாட்டை அமெரிக்காவால் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால், இந்தியா பொருளாதார ரீதியில் , அமெரிக்காவுக்கு தேவை. இந்தியாவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாகவும் உள்ளதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.