இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வானிலை ஆய்வு மையம் முன்னதாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,


16.09.2022 முதல் 20.09.20222: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பருதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


 






 






சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்| மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


 






கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


சேந்தியாத்தோப்பு (கடலூர்), ஏற்காடு (சேலம்) தலா 3 செ.மீ, கோவிலாங்குளம் (விருதுநகர்),


அகுப்புக்கோட்டை KVK (விருதுநகர்) தலா 2 செ.மீ


 






மீனவர்களுக்கான எச்சரிக்கை:


19.09.2022 மற்றும் 20.09.2022 மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய நென் தமிழ்நாடு கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகக்கில் வீசக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் படிக்க: The Royal Family Reunion: குடும்ப சர்ச்சைகளுக்கு நடுவே சர்ப்ரைஸ்...எலிசபெத்துக்கு ஒன்றாக அஞ்சலி செலுத்த வந்த வில்லியம்-கேட், ஹாரி-மேகன் தம்பதி!


Pitbull: தொடரும் ’பிட்புல்’ இன நாய்களின் கொடூர தாக்குதல்... ஆபத்தான நாய் இனங்களுக்கு தடை விதிக்க பீட்டா அழுத்தம்...