மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்க உள்ள பட்டப் படிப்பு தகுதியிலான ஒருங்கிணைந்த தேர்வுக்கு செப்.21-ம் தேதி முதல் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.


இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீர ராகவ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


''தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு பயிற்சிவகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) பட்டப்படிப்பு தகுதியிலான ஒருங்கிணைந்த தேர்வுக்கான (Combined Graduate Level Examination) அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது. இந்நிலையில், சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் அந்தத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி செப்.21-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.


Also Read: TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?


இத்தேர்வுக்கான கல்வித் தகுதியாக ஏதாவது ஒரு பட்டப் படிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான பாடத் திட்டத்தில் உள்ள பிரிவுகளுக்கான வகுப்புகளும், வாரந்தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.


விண்ணப்பிப்பது எப்படி?


விருப்பம் உள்ளவர்கள், 9597557913 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு தங்களது பெயர், கல்வித் தகுதி, முகவரி ஆகியவற்றை அனுப்பி பெயரை பதிவு செய்து விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். 




மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலக மின்னஞ்சல் முகவரியிலும் peeochn@gmail.com தொடர்பு கொள்ளலாம்''.


இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பட்டப்படிப்பு தகுதியிலான ஒருங்கிணைந்த தேர்வுக்கான (Combined Graduate Level Examination) அறிவிப்பை செப்டம்பர் 10ஆம் தேதி வெளியிடும் என்று அறிவித்த நிலையில், தற்போது சிஜிஎல் தேர்வு குறித்த அறிவிப்பை செப்டம்பர் 17ஆம் தேதி  வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Also Read: TNPSC : தமிழ்நாடு சிறைப் பணிகள்.. காலி பணியிடங்கள் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?


Also Read: TNCSC: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு; 8-ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண