IAS Transfer: தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 


ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்:


தமிழ்நாட்டில் அவ்வவ்போது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்று. நிர்வாக காரணங்களுக்காக இதுபோல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். இந்நிலையில், தற்போது பல்வேறு முக்கிய துறைகளில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், முக்கியமாக, 10 மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 



  • கோவை  மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

  • பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


10 மாநகராட்சி ஆணையர்கள்  இடமாற்றம்:



  • நெல்லை மாநகராட்சி ஆணையராக தாக்கரே சுபம் நியமிக்கப்பட்டுள்ளார். 

  • திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த சிவகிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரவீன்குமார், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராக  நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

  • ஆவடி மாநகராட்சி ஆணையர் கே.தர்பகராஜ், உயர்க்கல்வித்துறை துணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

  • ஆவடி மாநகராட்சி ஆணையராக ஷேக் அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். 

  • கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்த எல்.மதுபாலன், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

  • கோவை மாநகராட்சி ஆணையராக எம்.சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக தாக்கரே சுபேம் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 




மேலும் படிக்க


தன்பாலினத்தவர் திருமணத்துக்கு நீதிமன்றத்தால் அங்கீகாரம் வழங்க முடியாது: உச்ச நீதிமன்றம்


Kavingar Kannadasan: சாகாது கம்பனவன் பாட்டு... கண்ணதாசனுக்கும் பொருந்தும்.. கவியரசர் நினைவலைகள்!