CM Stalin Letter: ”தென்மாவட்ட மீட்பு பணிகளுக்கு அதிக ஹெலிகாப்டர்கள் வேண்டும்” - முதலமைச்சர் ஸ்டாலின் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம்

CM Stalin Letter: தென் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அதிக ஹெலிகாப்டர்களை அவசரமாக அனுப்ப வேண்டும் என, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

Continues below advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. குறிப்பாக நேற்று பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மக்கள் குடிக்க நீரின்றி, உணவின்றி, இருக்க இடமின்றி தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து தவித்து வருகின்றனர். 

Continues below advertisement

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணும் என பல் துறை இணைந்து மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கிய பயணிகள் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். இன்று காலை முதல் இந்திய விமானப்படையில் ஹெலிகாப்டர் மூலம் 4 கருவுற்ற பெண்களும் ஒரு குழந்தையும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:

இந்நிலையில் வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அதிக ஹெலிகாப்டர்களை அவசரமாக அனுப்ப வேண்டும் என, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “ தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. சில இடங்களில் 1871ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி நகரங்களில், தாமிரபரணி ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள எங்கள் அதிகாரிகள், SDRF மற்றும் NDRF குழுக்களை நாங்கள் திரட்டியுள்ளோம். தமிழகம் முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இணைப்புச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால், இப்பொருட்களை மக்களுக்கு வழங்க முடியவில்லை. ஹெலிகாப்டர்கள் மூலம்தான் அவர்களை அடைய முடியும். தற்போது விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்களும், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்களும், கடலோர காவல்படையின் 2 ஹெலிகாப்டர்களும் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காகவும், மாயமானவர்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுப்பப்படுகின்றன. பேரழிவின் மகத்தான தன்மை மற்றும் அதிக எண்ணிக்கையிலான குடியிருப்புகள் பாதுகாக்கப்படுவதால், மீட்பு மற்றும் நிவாரண விநியோகத்திற்காக எங்களுக்கு அதிக ஹெலிகாப்டர்கள் தேவை எனவே, அதிகபட்ச ஹெலிகாப்டர்களை உடனடியாக நிலைநிறுத்த உங்கள் அவசர தலையீட்டை நான் கேட்டுக்கொள்கிறேன்” என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

 

Continues below advertisement