• Diwali Special Buses: தீபாவளி சிறப்பு பேருந்துகள்; முன்பதிவு முதல் ஊர் திரும்புவது வரை - முழு விவரம் விரிவாக உள்ளே!


தீபாவளி பண்டிகைக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பேருந்துகள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சென்னையில் எங்கெங்கு பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவலை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ளார். நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பண்டிகை வரும் நிலையில் மக்கள் அனைவரும் பட்டாசு மற்றும் புத்தாடைகள் வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேசமயம் வெளியூரில் உள்ள பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படிக்க



  • TN Rain Alert: வீக் எண்டில் சில்லென மாறும் தமிழ்நாடு; அடுத்த 3 நாட்களுக்கு கனமழை அபாயம் - எந்தெந்த மாவட்டங்களில்?


இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யுக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.  28.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க



  • ”பாரத மாதா என்றே சொல்கிறோம்.. இந்திய மாதா என்று இல்லை” - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதில்


தெலுங்கானாவில் இருந்து சென்னை திரும்பிய மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இந்தியா பாரதம் என்று மாற்றப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. உயர் மட்டக் குழு அப்படி ஒரு பரிந்துரையை கொடுத்திருக்கிறது. பாரதியார் கூட, பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் என்றுதான் பாடியிருக்கிறார், நாம் கூட பாரத மாதா என்றுதான் சொல்கிறோம். இந்திய மாதா என்று சொல்வதில்லை. மேலும் படிக்க

  • Bangaru Adigalar: மேல்மருவத்தூர் பங்காடு அடிகளார் ஜீவ சமாதிக்கு நேரில் சென்ற இபிஎஸ்: பக்தி பரவசத்துடன் வழிபாடு..!


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் உள்ள அடிகளார் ஜீவசமாதியில் வழிபாடு செய்து  எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில்  தலைமை ஆன்மீகவாதியாக இருந்தவர் பங்காரு அடிகளார். பக்தர்களும் இவரை பின்பற்றுபவர்களும் அன்புடன் ’அம்மா’ என்றே அழைத்து வந்தனர். இந்த கோவிலுக்கு வருபவர்கள் கட்டாயம் இவரிடம் ஆசி பெற்றுச் செல்வார்கள். மேலும் படிக்க

 



  • Thevar Jayanthi: பசும்பொன்னில் இன்று தொடங்குகிறது தேவர் ஜெயந்தி, குருபூஜை - ஆயிரக்கணக்கான போலீஸ் குவிப்பு



இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன்னில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தார் முத்துராமலிங்க தேவர். இன்றைய தலைமுறையினருக்கு அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என தெரிவித்து முத்துராமலிங்க தேவர் இறுதிவரை நாட்டிற்காகவே வாழ்ந்து மறைந்தவர்.அவர் அனைத்து தரப்பு மக்களிடம் நல்ல அன்பை பெற்றிருந்தார்.