• Governor RN Ravi: சாதி, மத சண்டை போடுவதற்கா சுதந்திரம் வாங்கினோம்? ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேச பேச்சு!


சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள் பற்றியும் நம் பாரம்பரிய திருக்குறள், திருமந்திரம் உள்ளிட்டவை பற்றியும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் என் மண் என் தேசம் அமிர்த கலச யாத்திரை ( தமிழ்நாடு மாநில விழா) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டார். மேலும் தபால் துறை அதிகாரிகள் மற்றும் கடற்படை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மேலும் படிக்க



  • Northeast Monsoon: வலுவடைகிறதா வடகிழக்கு பருவமழை? 39% குறைவாக பதிவான மழை - வானிலை சொல்லும் தகவல் என்ன?


அரபிக் கடல் மற்றும் வங்கு கடலில் உருவான புயல்களின் காரணமாக வடகிழக்கு பருவமழையின் தொடக்க நிலை வலுவற்றதாக இருந்த சூழலில் தற்பொழுது புயல்கள் கரையை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடைய தொடங்குகிறது என  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை, விழுப்புரம், திண்டுக்கல், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்காலிலும் கனமழை என்ற பெய்யும் வாய்ப்பு உள்ளது என  சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க



  • Minister Ragupathi:ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டுவீசியதற்கு தி.மு.க. பொறுப்பல்ல - அமைச்சர் ரகுபதி விளக்கம்


தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கை போல வேறு யாரும் நடவடிக்கைகளை எடுத்து வருவதில்லை. ஆளுநர் மாளிகைக்கு முன்னால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. அதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் எந்த சட்ட ஒழுங்கும் கெட்டுவிடவில்லை. மேலும் படிக்க



  • 'ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்' - வானதி சீனிவாசன் கோரிக்கை


”குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சென்னைக்கு வருகை தர உள்ள நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.  பெட்ரோல் வீசியதாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று காவல் துறையே தெரிவித்துள்ளது. அந்த ரவுடியிடம் மேலும் நான்கு பெட்ரோல் குண்டுகள் இருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க



  • Droupadi Murmu: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று சென்னை வருகை.. பலத்த போலீஸ் பாதுகாப்பு..!


2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று சென்னை வரவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் 8வது பட்டமளிப்பு விழா நாளை (அக்டோபர் 27) மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்க உள்ளார். மேலும் படிக்க