- Bangaru Adigalar: சந்தன பேழையில் பங்காரு அடிகளார் உடல்.. தியான நிலையில் நல்லடக்கம்.. கண்ணீரில் மிதக்கும் மேல்மருவத்தூர்..!
மாரடைப்பால் காலமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல் இன்று மாலை சந்தன பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலின் சித்தர் பீடத்தின் தலைமை ஆன்மீக குருவான இருந்து வந்த பங்காரு அடிகளார் மாரடைப்பால் நேற்று (அக்டோபர் 19) மாலை 5 மணியளவில் காலமானார். இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதுமிருந்து பக்தர்கள் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த மேல்மருவத்தூர் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் படிக்க: Bangaru Adigalar: சந்தன பேழையில் பங்காரு அடிகளார் உடல்.. தியான நிலையில் நல்லடக்கம்.. கண்ணீரில் மிதக்கும் மேல்மருவத்தூர்..!
அரபிக் கடலில் புயலா? அடுத்த 7 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை...வானிலை மையம் அலர்ட்!
நேற்று காலை (19-10-2023) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை (20-10-2023) 08.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இது மேலும் வலுவடைந்து 22-10-2023 மாலை தீவிர புயலாக நிலவக்கூடும். மேலும் படிக்க: TN Rain Alert: அரபிக் கடலில் புயலா? அடுத்த 7 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை...வானிலை மையம் அலர்ட்!
“மத்தியில் யார் வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை தமிழக மக்களின் நலன் முக்கியம்” - சி.வி.சண்முகம்
கர்நாடாகவில் காங்கிரசும், பாஜகவும் எலியும் பூனையுமாக இருந்தாலும் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாதென இரு கட்சிகளும் உறுதியாக இருப்பதாகவும் காவிரி நீர் விவகாரத்தில் நீர் தர மறுக்கின்ற காங்கிரஸ் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தமிழக முதலமைச்சர் தொடராமல் ஏன் செயல்படுகிறார் எனவும் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் படிக்க: “மத்தியில் யார் வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை தமிழக மக்களின் நலன் முக்கியம்” - சி.வி.சண்முகம்
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் தர மாட்டிங்களா? ஆளுநர் செயலால் கொதித்த அமைச்சர் பொன்முடி!
சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.மேலும் படிக்க: Minister Ponmudi: சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் தர மாட்டிங்களா? ஆளுநர் செயலால் கொதித்த அமைச்சர் பொன்முடி!
நடிகர் தாமுவின் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.. உணர்ச்சிவசப்பட்டு அழுத மாணவர்கள்
உசிலம்பட்டியில் நடிகர் தாமுவின் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் - உணர்ச்சி வசப்பட்டு அழுததில் மயக்கமடைந்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் கண்களை மூடியிருந்த ஏராளமான மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஒரு கட்டத்தில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பனும் கண்கலங்கினார்.மேலும் படிக்க: நடிகர் தாமுவின் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.. உணர்ச்சிவசப்பட்டு அழுத மாணவர்கள்