உசிலம்பட்டியில் நடிகர் தாமுவின் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் - உணர்ச்சி வசப்பட்டு அழுததில் மயக்கமடைந்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.


நிகழ்ச்சியில் கண்களை மூடியிருந்த ஏராளமான மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்ஒரு கட்டத்தில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பனும் கண்கலங்கினார்.





அழுது கொண்டிருந்த இரு மாணவர்கள் உணர்ச்சியின் மிகுதியால் மயக்கமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக மயக்கமடைந்த மாணவர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.


 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 10, 11, 12 -ம் வகுப்பு மாணவ மாணவிகள் எதிர்கொள்ளும் பொதுத்தேர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் ஏற்பாட்டில் நடைபெற்றது. உசிலம்பட்டி கல்வி மாவட்ட அளவில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் தாமு கலந்து கொண்டு பொதுத் தேர்வு குறித்த விழிப்புணர்வை வழங்கினார். மேலும் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி போன்று தமிழகத்தின் 234 தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் முயற்சியில், மாவட்ட காவல் துறையினரின் ஒத்துழைப்போடு மாணவ மாணவிகளுக்கு இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினால் தமிழகம் கல்வியில் மேலும் வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கை உள்ளதாக பேசினார்.



 



 

தொடர்ந்து ஆரம்பத்தில் மாணவ மாணவிகளை சிரிக்க வைத்து கொண்டே விழிப்புணவை வழங்கிய நடிகர் தாமு பின்னர் அனைத்து மாணவ மாணவிகளையும் கண்களை மூடச் சொல்லி தாய், தந்தை மற்றும் ஆசிரியர்கள் படும் துயரங்களையும், அவர்களுக்காக கல்வியில் எவ்வாறு முன்னேற்றம் அடைவது என தத்ரூபமாக நடிகர் தாமு எடுத்துரைக்க,



 

நிகழ்ச்சியில் கண்களை மூடியிருந்த ஏராளமான மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்., ஒரு கட்டத்தில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பனும் கண்கலங்கினார். நடிகர் தாமுவின் பேச்சால் உணர்ச்சி வசப்பட்டு அழுது கொண்டிருந்த இரு மாணவர்கள் உணர்ச்சியின் மிகுதியால் மயக்கமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக மயக்கமடைந்த மாணவர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.,