• 'இஸ்ரேலில் இருந்து இதுவரை 132 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்’ - அமைச்சர் செஞ்சி மஸ்தான்


இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தமிழக அரசும் மத்திய அரசுடன் இணைந்து அங்கிருக்கும் தமிழர்களை அழைத்து வருகின்றது. அதன்படி இன்று கோவை விமான நிலையத்திற்கு 4 பேர் அழைத்து வரபட்டனர். அவர்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். மேலும் படிக்க



  • IT Raid: சென்னையில் காலை முதல் திடீர் ரெய்டில் வருமானவரித்துறை அதிகாரிகள்.. 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..


Kawarlal pharmaceutical நிறுவனம் தொடர்பான இடங்களில் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரிச் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை வேப்பேரி, பூக்கடை, வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சௌகார்பேட்டை ஸ்டார்ட்டன் முத்தையா முதலி தெருவில் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. மாதவரம் நடராஜன் நகரில் தனியார் குடோனிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் படிக்க



  • TN Weather Update: வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?


வங்க கடலில் வரும் 20 ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 20 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் மத்திய வங்க கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இதன் தாக்கம் அதிகமாக இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • Diwali Bonus: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆஃபர்.. தீபாவளி போனஸிற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு..


மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப் படைகள் உட்பட குரூப் சி மற்றும் வர்த்தமானி அல்லாத குரூப் பி தரவரிசையில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு தற்காலிக போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் போனஸ் பலருக்கும் உதவிகரமாக இருக்கும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் படிக்க



  • Latest Gold Silver: தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.360 உயர்வு.. இன்றைய தங்கம் வெள்ளி விலை என்ன?


இன்று (அக்டோபர் 18-ஆம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.360 அதிகரித்து சவரனுக்கு ரூ.44,480 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.45 அதிகரித்து கிராமுக்கு ரூ. 5,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48,240 ஆகவும் கிராமுக்கு ரூ.6,030 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் படிக்க