கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி மூன்றாம் நாளை முன்னிட்டு ஸ்ரீ சேஷ சயனம் அலங்காரத்தில் அம்பாள் காட்சியளித்தார்.
தென் தமிழகத்தின் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு நாள்தோறும் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நவராத்திரி மூன்றாம் நாளை முன்னிட்டு அம்பிகைக்கு சேஷ சயனம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு அம்பிகைக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி மூன்றாம் நாள் சிறப்பு அலங்காரத்திற்கான ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி மூன்றாம் நாளை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு மாரியம்மன் அலங்காரம்.
கரூர் நகரப் பகுதியில் உள்ள தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்றாம் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக துர்க்கை அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு மாரியம்மன் அலங்காரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதைத் தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் கொங்குமத்தால் துர்க்கை அம்மனுக்கு 1008 நாமாவளிகள் கூறிய பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி மூன்றாம் நாள் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலயத்தின் சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து வந்தார்.