வங்க கடலில் வரும் 20 ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 20 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் மத்திய வங்க கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இதன் தாக்கம் அதிகமாக இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.


மேலும், தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல்  நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 23 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என கணித்துள்ளது.


தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கூடிய லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அக்டோபர் மாதம் தொடங்கியது முதல் சென்னையில் மழையின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. ஒரு சில நாட்களில் மட்டும் வெப்பநிலை அல்லது வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. ஆனால் தென் தமிழக பகுதிகளான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில்  நல்ல மழை பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


அரபிக்கடல் பகுதிகள்:


18.10.2023:தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


19.10.2023: தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


20.10.2023 மற்றும் 21.10.2023: தென்மேற்கு  அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.


Israel - Hamas War: மடிந்த மனிதம் - நள்ளிரவில் காஸாவில் நிகழும் இனப்படுகொலை? - உலக நாடுகள் கடும் கண்டனம்


மன்னராட்சியாக அதிகாரம் கைமாறும் வாரிசு அரசியல்; பாஜகவில் இல்லை- வானதி சீனிவாசன்


Diwali Bonus: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆஃபர்.. தீபாவளி போனஸிற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு..