மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப் படைகள் உட்பட குரூப் சி மற்றும் வர்த்தமானி அல்லாத குரூப் பி தரவரிசையில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு தற்காலிக போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.






ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் போனஸ் பலருக்கும் உதவிகரமாக இருக்கும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள் ஆவலாக காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று இது தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப் படைகள் உட்பட குரூப் சி மற்றும் வர்த்தமானி அல்லாத குரூப் பி தரவரிசையில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு தற்காலிக போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் அறிவிப்பு படி, 2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு ஊழியர்களுக்கான தற்காலிக  போனஸ் (அட்ஹாக் போனஸ்) கணக்கிடுவதற்கான உச்சவரம்பை ரூ. 7,000 ஆக  நிதி அமைச்சகம் நிர்ணயம் செய்துள்ளது.  மார்ச் 31, 2023 முதல் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே போனஸ் வழங்கப்படும், மேலும் 2022-23 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ந்து சேவை செய்த ஊழியர்களுக்கு மட்டுமே போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  6 மாதங்கள் முதல் முழு ஆண்டு வரையிலான வருடத்தில் தொடர்ச்சியான சேவையின் காலத்திற்கு தகுதியான ஊழியர்களுக்கு சார்பு-விகித கட்டணம் (பணிபுரிந்த மாதங்களின் அடிப்படையில்) அனுமதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பிஎல்பி அல்லாத (தற்போதைய போனஸ்) செலுத்த வேண்டிய தொகை (ரூ. 1200 x 30/30.4 = ரூ.1184.21 (ரூ. 1184) ஆக கணக்கிடப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கான ஊதியம் மாதம் ரூ. 1200 க்குக் குறைவாக இருந்தால், அந்தத் தொகை மாதாந்திர ஊதியத்தில் கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் எந்த பிரிவு ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் வழங்கப்படும் என்பது குறித்தும் மத்திய அரசு தரப்பில் விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Israel - Hamas War: ஈவு இரக்கமின்றி காஸா மருத்துவமனை மீது தாக்குதல் - 500 பேர் பலி .. இஸ்ரேல் தந்த விளக்கம்

வெறுப்பின் உச்சக்கட்டம்: சிறுவனுக்கு 26 முறை கத்தி குத்து... இஸ்ரேல் போரால் பரவும் வெறி!