Kawarlal pharmaceutical நிறுவனம் தொடர்பான இடங்களில் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரிச் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை வேப்பேரி, பூக்கடை, வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சௌகார்பேட்டை ஸ்டார்ட்டன் முத்தையா முதலி தெருவில் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. மாதவரம் நடராஜன் நகரில் தனியார் குடோனிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும் எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.