• Free Breakfast Scheme: இனி இந்த மாணவர்களுக்கும் காலை உணவு; அரசு அதிரடி அறிவிப்பு


அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி, பிற அனைத்துப் பள்ளிகளுக்கும் காலை உணவுத்திட்டம் கொண்டு வரப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. கடலோரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  நிதிநிலையைக் கருத்தில்கொண்டு அனைத்து மாவட்டங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தமிழ்நாடு முழுவதும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் படிக்க



  • Dengue: 382 பேருக்கு டெங்கு பாதிப்பு.. கட்டுப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் - ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி..


தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாக  சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் டெங்கு மற்றும் மழைக்கால நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். இந்த மருத்துவ முகாமில் டெங்கு பரிசோதனை மேற்கொண்டு பொதுமக்களுக்கு மருந்து வழங்கப்பட்டது. மேலும் படிக்க



  • Tirupati Temple: பக்தர்களே..! திருப்பதி போறீங்களா? நாளை முதல் சிறப்பு தரிசனங்கள் ரத்து - தேவஸ்தானம் அறிவிப்பு


ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஏழுமலையானுக்கு உகந்த புரட்டாசி மாதம் தொடங்கியதை அடுத்து அந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. வரும் சனிக்கிழமையுடன் புரட்டாசி மாதம் நிறைவடைய உள்ளதால், தென்னிந்தியா மட்டுமின்றி நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி கோயிலில் வரும் 15ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரையில் நவராத்திரி பிரமோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும்  படிக்க



  • TN Rain Alert: மழைக்கு தயாரா மக்களே.. இன்று 14 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..


தென்தமிழக பகுதிகளின் மேல்  நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  13.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்  பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க



  • Udhayanidhi Stalin: மக்களவைத் தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களுக்கு எதிரான சதித்திட்டம் - அமைச்சர் உதயநிதி எச்சரிக்கை


ஒரு நல்ல அரசு என்பது உணவு உற்பத்தி, கல்வி, சுகாதாரம் தொழில்துறை ஆகிய அம்சங்களில் சிறந்து விளங்க வேண்டும் என்று சொல்வார்கள். தமிழ்நாடு உணவு, விவசாயம் மற்றும் தொழில்துறையில் நல்ல உயரத்தை எட்டியுள்ளது. சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய மாநிலங்கள் பெரும்பாலானவை ஒரே நிலையில்தான் இருந்தன. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகள்தான் இருந்தன. ஆனால், தென்மாநிலங்கள் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாடு இந்தளவு முன்னேறியிருக்கிறது என்றால் அதற்கு இங்கு நிகழ்ந்த புரட்சிதான் காரணம். மேலும்படிக்க