• Rajnath Singh: மிக்ஜாம் புயலால் சீரழிந்த சென்னை.. முதலமைச்சர் ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!


மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தகவலை கேட்டறிந்தார். மத்திய அரசின் பிரதிநிதியாக தமிழ்நாடு வருகை தந்த ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளம் பாதித்த பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்தபின், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் படிக்க



  • தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் - முதல்வர் ஸ்டாலினிடம் போனில் பிரதமர் உறுதி


மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி. டி.ஆர். பாலு சந்தித்தார். அப்போது இடைக்கால நிவாரணம் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடித்ததை டி.ஆர்.பாலு வழங்கினார். அந்த சந்திப்பில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.  பிரதமர் மோடியை சந்தித்த டி.ஆர். பாலு அடுத்ததாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்கவுள்ளார். மேலும் படிக்க



  • Cyclone Michaung: மிக்ஜாம் புயல் சேதம்.. ரூ. 5060 கோடி கேட்ட நிலையில் ரூ.450 கோடியை விடுவித்த மத்திய அரசு!


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கடுமையான கனமழை பெய்தது. இதில் சென்னை மாவட்டம் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நிலைகுலைந்து போனது. 24 மணி நேரமாக தொடர்ச்சியாக மழை பெய்ததால் தமிழ்நாடு அரசாலும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியவில்லை. அதற்குள் சென்னையை வெள்ளம் சூழந்தது. மேலும் படிக்க



  • Edappadi Palanisamy: 4 ஆயிரம் கோடி வெள்ள நீர் வடிகால் பணிகளை வெளியிடத் தயாரா? முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி


சென்னை மாநகரத்தில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் IAS அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகளாக (Nodal Officers) நியமிக்கப்பட்டு, வடகிழக்குப் பருவ மழையினை எதிர்கொள்வதற்கு தக்க ஆலோசனை வழங்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திற்கும் நியமிக்கப்படும் IAS அதிகாரிகள் அந்த மண்டலத்தில் உள்ள வார்டுகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள வருவாய், மாநகராட்சி, காவல்துறை, பெருநகர குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, பொதுப்பணி, மக்கள் நல்வாழ்வுத் துறை. மேலும் படிக்க



  • Senthil Balaji: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்! - சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் செந்தில்பாலாஜி!


கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி கொடுப்பதாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருக்கும் அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. மேலும் படிக்க