வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 4ம் தேதி புயலாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், வரும் டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புதியதாக உருவாகியுள்ள இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வட தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க: TN Rain Alert: சென்னையை குறி வைக்கும் மிக்ஜாம் புயல்.. 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை.. லேட்டஸ்ட் அப்டேட்


 


வங்கக்கடலில் வரும் 4ம் தேதி மிக்ஜாம் புயல் உருவாக உள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் அடுத்த நான்கு நாட்களுக்கு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க:TN Rain Alert: 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்?


 


வங்கக்கடலில் புயல் வரும் 4ம் தேதி உருவாக உள்ள சூழலில், சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை மிகத்தீவிரமாக மழை பெய்தது. இதனால், கொளத்தூர், அண்ணாநகர், கிண்டி, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய நிலையில், மாநகராட்சி பணியாளர்கள் அதை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 16 ஆயிரம் பணியாளர்கள் மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 400க்கும் மேற்பட்ட மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க; Radhakrishnan Pressmeet: “16,000 ஊழியர்கள்; 491 மோட்டார்கள்; வெள்ளம் வந்தால்...” - நடவடிக்கைகளை விவரித்த மாநகராட்சி ஆணையர்


 


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர். இந்த நிலையில், அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் விரைவில் நலம் பெற வேண்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் படிக்க; Vijayakanth: விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி உசிலம்பட்டி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு


 


வங்கக்கடலில் புயல் உருவாக உள்ள சூழலில் சென்னையில் நேற்று கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நேற்று இரவு சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் தண்ணீர் வடிந்தாலும் சில இடங்களில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மழைநீர் தேங்கிய இடங்களில் நேரில் ஆய்வு செய்தார். மேலும் படிக்க: Chennai Rains: சென்னை எப்படி இருக்கு..? கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!