• Senthil Balaji: இதய பிரச்சினையை காரணம் காட்டிய செந்தில் பாலாஜி.. உச்சநீதிமன்றம் வைத்த செக்...!


2011-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கி தருவாக கூறி பணம் பெற்றதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பலரும் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி பலமுறை ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் அவர் சிறையில் தான் இருந்து வந்தார். மேலும் படிக்க



  • Governor Ravi: ”3 ஆண்டுகளாக ஆளுநர் ரவி என்ன செய்தார்?” - உச்சநீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி


தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 10ம் தேதி நடத்திய விசாரணையின் போது, ஆளுநரின் செயல்பாடு தொடர்பான விவகாரம் மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக கூறியது. மேலும் படிக்க



  • Vijayakanth Hospitalized: விஜயகாந்துக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் என்னதான் நடக்கிறது?


தேமுதிக தலைவரும், சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் தொண்டை வலி, மார்பு சளி, இடைவிடாத இருமல் மற்றும்  உடல்நலக் குறைவால் கடந்த சனிக்கிழமை சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக தேமுதிக வெளியிட்ட செய்தி குறிப்பில், ”தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாதாந்திர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார். மேலும் படிக்க



  • TN Public Exam: 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்; தலைமை ஆசிரியர்களுக்குப் பறந்த முக்கிய உத்தரவு!


அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 2023 -2024- ஆம்‌ கல்வியாண்டிற்கான பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளை எழுதும் மாணவர்களின்‌ பெயர்ப்‌ பட்டியலை எமிஸ் விவரங்களின்‌ அடிப்படையில்‌ தயாரித்து சரிபார்க்க வேண்டும் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது. மேலும் படிக்க



  • TN Rain Alert: குலசேகரப்பட்டினத்தில் கொட்டித் தீர்த்த மழை.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. இன்னும் எத்தனை நாட்களுக்கு கனமழை?


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  நிலவுகிறது.
தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய  தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில்  ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  நிலவுகிறது. இதன் காரணமாக, 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 20.11.2023: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க