அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


2023 -2024- ஆம்‌ கல்வியாண்டிற்கான பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளை எழுதும் மாணவர்களின்‌ பெயர்ப்‌ பட்டியலை எமிஸ் விவரங்களின்‌ அடிப்படையில்‌ தயாரித்து சரிபார்க்க வேண்டும் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது.


பொதுத்‌ தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின்‌ பெயர்ப்பட்டியல்‌ தயாரிப்பதற்கு, எமிஸில் பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள மாணவர்களின்‌ கீழ்க்காணும்‌ தகவல்கள்‌ வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  1. மாணவர் பெயர்‌ (தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌)

  2. பிறந்த தேதி

  3. புகைப்படம்‌ (jpeg, jpg)

  4. பாலினம்‌



  1. வகைப்பாடு (சாதி அடிப்படையிலான வகைப்பாடு)

  2. மதம்‌

  3. மாணாக்கரின்‌ பெற்றோர்‌ பாதுகாவலர்‌ பெயர்‌ (தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌)

  4. மாற்றுத்‌ திறனாளி வகை மற்றும்‌ சலுகைகள்‌

  5. கைபேசி எண்‌

  6. பாடத்‌ தொகுப்பு – Group code (+1 மாணவர்களுக்கு மட்டும்‌)

  7. பயிற்று மொழி (Medium of instruction)

  8. மாணவர்‌ வீட்டு முகவரி

  9. பெற்றோரின்‌ ஆண்டு வருமானம்


நவ.30 கடைசி


பள்ளி மாணவர்களின்‌ மேற்குறிப்பிட்ட தகவல்களைப்‌ பயன்படுத்தியே, 2023 - 2024ஆம்‌ கல்வியாண்டிற்கான பத்தாம்‌ வகுப்பு, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பொதுத்‌தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் ‌பெயர்ப் பட்டியல்‌ தயாரிக்கப்பட உள்ளதால்‌, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்‌ பள்ளித்‌தலைமையாசிரியர்களும்‌, 30.11.2023 வரையிலான நாட்களில்‌ எமிஸில்‌ தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள யூஸர் ஐடி மற்றும்‌ Password-ஐ பயன்படுத்தி EMIS போர்ட்டலில்‌ சென்று தங்களது பள்ளியில்‌ பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பதினோராம்‌ வகுப்பு பயிலும்‌ அனைத்து மாணவர்களது மேற்குறிப்பிட்ட விவரங்கள்‌ சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மாணவரின்‌ பெயர்‌, பிறந்ததேதி, புகைப்படம்‌ மற்றும்‌ பாடத்தொகுப்பு ஆகிய விவரங்கள்‌ சரியாக உள்ளதா என்பதனையும்‌ சரிபார்த்து, திருத்தங்கள்‌ இருப்பின்‌ உடன்‌ திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்‌.


EMIS Portal-ல் உள்ள மாணவரது பெயர்‌ / பெற்றோரது பெயர்‌ உள்ளிட்ட தமிழில்‌ உள்ள விவரங்கள்‌ அனைத்தும்‌ UNICODE Font- ல் மட்டுமே இருத்தல்‌ வேண்டும்‌. வேறு எதேனும்‌ தமிழ்‌ Font -ல்‌ விவரங்கள்‌ இருந்தால்‌ அதனை முழுமையாக நீக்கம்‌ செய்து விட்டு 11ம்‌ ல்‌ மீண்டும்‌ UNICODE Font- ல் பதிவேற்றம்‌ செய்தல்‌ வேண்டும்‌.


திருத்தம் செய்வது எப்படி?


பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌, தங்கள்‌ பள்ளியில்‌ பயிலும்‌ பத்தாம்‌ வகுப்பு, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மாணவர்களின்‌ அனைத்து விவரங்களையும்‌ எமிஸ் போர்ட்டலில் சென்று சரிபார்த்து, திருத்தங்கள்‌ இருப்பின்‌ திருத்தம்‌ செய்யும்‌ பணியினையும்‌ மேற்குறிப்பிட்டுள்ள நாட்களிலேயே மேற்கொள்ளுதல்‌ வேண்டும்‌.


மேலும்‌, பள்ளியின்‌ பெயரை தமிழ்‌ மற்றும் ஆங்கிலத்தில்‌ சரியாக EMIS Portal-ல் பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.


தேர்வர்கள்‌ பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழின்‌ அடிப்படையில்தான்‌ உயர்கல்வி மற்றும்‌ வேலை வாய்ப்புகள்‌ வழங்கப்படுகிறது. எனவே, பத்தாம்‌ வகுப்பு சான்றிதழில்‌ தேர்வரின்‌ பெயர்‌, பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும்‌ தேர்வரின்‌ பெற்றோரின்‌ முன்னிலையில்‌ உரிய படிவத்தில்‌ தயார்செய்து கையொப்பம்‌ பெறுதல்‌ வேண்டும்‌ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.