கரூரில் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் 200க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்தனர்.


 




 


ராட்ஸ்ரிய ஸ்வயம் சேவக சங்கம் விஜயதசமி விழா பதசஞ்சலன்  ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணி வகுப்பு ஊர்வலம் கரூர் மாநகர் பகுதியில் நடைபெற்றது. கரூர் மாநகர் வெங்கமேடு பகுதியில் புறப்பட்ட ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு இணைப்பு பொறுப்பாளர் குணசேகரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


 




இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் 200க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் வெங்கமேடுகொங்கு நகரில் இருந்து A1 தியேட்டர், சிவானந்தா தெரு, திட்ட சாலை வழியாக மீண்டும் கொங்கு நகர் சென்று அடைந்தது நிறைவு பெற்றது. சீருடையுடன் வந்த ஆர் எஸ் எஸ் தொண்டர்கள், பேண்ட் வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. 


 




 


இந்த ஊர்வலத்தில் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து கொங்கு நகரில் ஆர் எஸ் எஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு காரணமும் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பேரணி தொடங்கிய முதல் கொங்கு நகர் சாலையில் ஆர்எஸ்எஸ் கூட்டம் முடியும் வரை பாதுகாப்பு பணியை வழங்கினார்.