பழங்கால பொருட்கள் கண்டுபிடிப்பு:
காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் எலும்பாலான பழங்காலக் கருவி ,பானையோட்டுக் குறியீடு,சங்க கால மேற்கூரை ஓட்டு எச்சங்கள் கண்டுபிடிப்பு. சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா,செயலர் இரா.நரசிம்மன், கள ஆய்வாளர் கா.சரவணன் ஆகியோர் காளையார் கோவில் பாண்டியன் கோட்டைப் பகுதியில் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் எலும்பாலான பழங்காலக் கருவி, பானையோட்டுக் குறியீடு,சங்க கால மேற்கூரை ஓட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. இது குறித்து கா.காளிராசா தெரிவித்ததாவது.மேலும் வாசிக்க..
கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்
கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.கரூர் நகர பகுதியான அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு கந்த சஷ்டியை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலை அணிவித்த பிறகு சாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் வாசிக்க..
எம்.பி.ஜோதிமணி ஆய்வு
கரூரில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி இரண்டரை ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் பார்க்கை எம்.பி.ஜோதிமணி ஆய்வு மேற்கொண்ட போது, நான்கரை ஆண்டுகளாக இப்பகுதிக்கு வராமல் எதற்காக வந்தீர்கள் என அதிமுகவினர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், பஞ்சாயத்து தலைவர், அறநிலையத்துறை அதிகாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பூங்கா பராமரிப்புக்கு ஆகும் தொகையை யார் கொடுப்பது என்றும், அதற்கான ஓப்பன் டெண்டர் வைக்கப்பட்டும் ஒருவர் கூட வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பூங்காவை எம்.பி ஜோதிமணி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் வாசிக்க..
தமிழக மீனவர்கள் 22 பேர் விடுவிப்பு
இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களையும் இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது. இதையடுத்து அவர்களை விடுவிக்க நடவடிக்க எடுக்க வேண்டும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு ராமேஸ்வர மீனவர்கள் கோரிக்கை வித்தனர். இதையடுத்து மத்திய அமைச்சரின் வேண்டுகோளிற்கிணங்க 22 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க
வானிலை அறிவிப்பு
”1. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.மேலும் வாசிக்க..
பொது இடங்களில் திரையிடப்படும் உலகக் கோப்பை இறுதி போட்டி
சென்னை மெரினா, பெசண்ட் நகர் கடற்கரையில் நேரலையில் உலகக் கோப்பை இறுதி போட்டியை திரையிட தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வணிக வளாகங்கல், நட்சத்திர விடுதிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வாசிக்க..