சென்னையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் கூடுதலாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


சென்னையில் இருந்து நாளை மாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாகபெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து நாளை மறுநாள் இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். கூட்ட நெரிசலை தவிர்க்க வந்தே பாரத்  சிறப்பு ரயில் கூடுதலாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை-மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை  நாடு முழுவதும் 33 வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கும் சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையில் இருந்து நெல்லைக்கும் என மொத்தம் 3 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது போக விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு திருப்பதி வழியாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயிலில் உள்ள AC, தானியங்கி கதவு உள்ளிட்ட வசதிகள் பயணிகளுக்கு இந்த ரயிலில் பயணிப்பதற்கான ஆர்வத்தை தூண்டுகிறது. 


இந்த நிலையில் தற்போது தென்னக ரயில்வேக்கு ஒதுக்கப்படும் வந்தே பாரத் ரயிலை தமிழ்நாட்டிற்குள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், கிட்டத்தட்ட இந்த பேச்சுவார்த்தை இறுதியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பயன்பாட்டிற்கு வந்தால் மதுரை- பெங்களூரு இடையிலான 435 கிலோமீட்டர் தூரத்தை மற்ற ரயில்கள் கடக்க சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் நேரம் 7 மணி நேரமாக இருந்தால், வந்தே பாரத் 6 அல்லது 5.30 மணி நேரத்தில் கடந்து விடும்.


மதுரையில் இருந்து பெங்களூருக்கு இயக்கவுள்ள வந்தே பாரத் ரயில், மதுரையில் இருந்து கிளம்பி திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூர் வரை இயக்கப்படலாம். மேலும் கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் ரயில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. பயணிகள் மத்தியில் இந்த மார்க்கமாக இயக்கப்படும் ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிது.


மேலும் படிக்க


IND vs AUS Final 2023: 2 முறை... ஆஸ்திரேலியா கப் ஜெயிச்சதுக்கு இது காரணமோ? அப்படின்னா இந்தமுறை இந்தியாதான் சாம்பியன்!


IND vs AUS Final 2023: “உலகக்கோப்பை இறுதிப்போட்டியை உடனே நிறுத்தணும்” - காலிஸ்தான் ஆதரவாளர் மிரட்டல்