உலகக் கோப்பை இறுதி போட்டியை சென்னையில் ரசிகர்கள் காண பொது இடங்களில் திரையிட தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் கலந்துக்கொண்ட 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வாருகிறது. இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து இன்று அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டி நடைபெறுகிறது.
இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்க பலரும் அகமதாபாதிற்கு படையெடுத்துள்ளனர். ஆனால் நேரில் சென்று இந்த போட்டியை காண இயலாத ரசிகர்களுக்கு சென்னையில் பொது இடங்களில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக சென்னை மெரினா, பெசண்ட் நகர் கடற்கரையில் நேரலையில் உலகக் கோப்பை இறுதி போட்டியை திரையிட தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வணிக வளாகங்கல், நட்சத்திர விடுதிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.