இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களையும் இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது. இதையடுத்து அவர்களை விடுவிக்க நடவடிக்க எடுக்க வேண்டும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு ராமேஸ்வர மீனவர்கள் கோரிக்கை வித்தனர். இதையடுத்து மத்திய அமைச்சரின் வேண்டுகோளிற்கிணங்க 22 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 


பாம்பன் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகுகள் நவம்பர் 18 ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த  IND TN 10 MO 1414 மற்றும் IND TN 10 MO 1756 என்று என் கொண்ட இரண்டு நாட்டு படகுகளையும்  22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.


இந்நிலையில் ராமேஸ்வரம் வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் விசைப்படகு மற்றும் நாட்டு படகு  மீனவர் சங்கத் தலைவர்கள் நேரில் சென்று சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஒரு கோரிக்கையை வைத்தனர்  மீனவர்களின் கோரிக்கை அடிப்படையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொலைபேசி மூலம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இலங்கை அரசிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் நல்லிணக்க அடிப்படையில் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதியை சேர்ந்த இரண்டு நாட்டு படகுகளுடன் 22 மீனவர்களையும் தற்போது விடுதலை செய்யப்பட்டு சர்வதேச கடல் எல்லை வரை இலங்கை கடற்படையினர் அழைத்து வந்து ஒப்படைத்ததாக நாட்டுப்படகு மீனவ சங்கத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர்.


மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட அன்றைய தினமே மத்திய அமைச்சரை சந்தித்து மீனவர் சங்கங்கள் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உடனடியாக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது மீனவ கிராமங்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.