• TN Govt Assembly: நவம்பர் 18-ஆம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் - மீண்டும் மசோதாக்களை நிறைவேற்ற தமிழக அரசு முடிவு


சட்டமன்றத்தில்  நிறைவேற்றி அனுப்பிய  மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணையில் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் பல்வேறு கருத்துகளை கூறி இருந்தது. அதன்படி, ஆளுநர் ரவி சட்டசபை மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. மேலும் படிக்க



  • National Press Day : ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம்’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..


1996 -ஆம் ஆண்டு முதல் தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர்,16-ம் தேதி ‘தேசிய பத்திரிகை தின’மாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் முக்கிய அங்கமாக விளங்கும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 1956- ஆம் ஆண்டு பத்திரிகை நெறிமுறைகளைப் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என நோக்கத்தில் சட்டப்பூர்வ அதிகாரத்துடன் கூடிய ஒரு அமைப்பை உருவாக்க பத்திரிகை ஆணையம் முடிவு செய்தது. மேலும் படிக்க



  • 10th 11th 12th Public Exam Result Date: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?- தேதிகள் அறிவிப்பு


10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்ற தேதிகளை அறிவித்த கையோடு, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மே14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. மேலும் படிக்க



  • Commercial LPG Cylinder: காலையிலேயே நல்ல சேதி - வணிக சிலிண்டரின் குறைப்பு..! எவ்வளவு தெரியுமா?


கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சர்வதேச சந்தை மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின்  விலையை நிர்ணயிக்கின்றன. அந்த வகையில், 19 கிலோ எடைகொண்ட வணிக சிலிண்டரின் விலையில் 57 ரூபாயை  குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் மூலம், 1, 999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த சிலிண்டரின் விலை தற்போது 1,942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வாடிக்கையாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க



  • IT Raid: சென்னையில் பிரபல ஜவுளி நிறுவனர் வீட்டில் வருமான வரி சோதனை - குறி வைக்கப்படும் இடங்கள்..!


சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வசுந்தரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டனின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம், மண்ணடியில் உள்ள தொழிலதிபர்களின்  வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க