கரூரில் கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

கரூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்த்து கல்வி கற்பதற்கு நடவடிக்கை தொடர்பான மூன்று அடுக்கு அமைப்புகுழு ஆலோசனைக் கூட்டம்.

Continues below advertisement

கரூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வைப்பதற்கான  சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் கூறியுள்ளார்.

Continues below advertisement


கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தலைமையில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்து கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான மூன்று அடுக்கு அமைப்பு கொண்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: இக்கூட்டத்தில் பள்ளி அளவிலான முதல் மட்ட குழு சிறப்பாக பணி மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு போதுமான அளவுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் முதன்மை கல்வி அலுவலர்கள் மேலாய்வு மேற்கொள்ள வேண்டும். வாரந்தோறும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் தெரிவிக்க வேண்டும்.  15 நாட்களுக்கு மேல் வருகை தராத இடைநீற்றல் ஆக வாய்ப்புள்ள குழந்தைகளை இடைநீற்றலின்றி மீண்டும் பள்ளிக்கு வருகை புரிவதை வட்டார மற்றும் பள்ளி அளவிலான மூன்றடுக்கு குழு உறுப்பினர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு வழிகாட்டுதல் ஏற்படுத்த வேண்டும். 

 


 

10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 2022-23 ஆம் பொதுத்தேர்வுகள் எழுதாத  மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தற்போது துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்களை அவர்களுக்கு விருப்பமான வேறு தொழிற்கல்வி பயிற்சிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களையும் அவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளும் தொழில் நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு தேவையாக உதவிகளை செய்ய தயாராக உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

 


 

 

பொதுத்தேர்வுகளில் முடிவு காலாண்டு தேர்வு மாணவர்கள் செயல்பாடுகள்  குறித்து  மார்ச்2023 ஏப்ரல் 2023  பள்ளி ஆசிரியர், முதல்வர்களுடன் மீளாய்வுக் கூட்டம் மற்றும்  2023-24 நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித்திட்டம்  குறித்த மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்சுமதி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணிவண்ணன், குளோபல் சமூக நலப் பாதுகாப்பு இயக்க சொக்கலிங்கம், வருவாய் வட்டாட்சியர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 17 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

Continues below advertisement